For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

3 முறை புனேயிடம் அடி வாங்கி, மொத்தமாக திருப்பி கொடுத்த மும்பை

By Veera Kumar

ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனில், பைனல் போட்டி உட்பட, இதுவரை மும்பை இந்தியன்ஸ்-ரைசிங் புனே அணிகள் 4 முறை மோதியுள்ள நிலையில் மூன்றில் புனே வென்றது. ஆனால் முக்கியமான பைனல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.

புனே அணிக்கு இதுதான் ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியாகும். அடுத்த சீசன் முதல் அந்த அணியும், குஜராத் அணியும் இருக்கப்போவதில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மீண்டும் அடுத்த வருடம் முதல் ஆட உள்ளன.

முதலில் சில போட்டிகளில் சொதப்பினாலும், பிறகு சிறப்பாக செயல்பட்ட புனே அணி, மீண்டு வந்தது. பைனல் வரை அந்த அணி பதற்றமேயில்லாமல் வந்தது.

மும்பையை வீழ்த்தியிருந்தது

மும்பையை வீழ்த்தியிருந்தது

இதில் குறிப்பிடத்தக்க அம்சம், அந்த அணி, லீக் சுற்றில் இருமுறையும், குவாலிபையர்-1 சுற்றில் ஒருமுறையும் மும்பை அணியை வென்றிருந்தது.

புனே வெற்றி

புனே வெற்றி

இவ்விரு அணிகளும் மோதிய முதல் லீக் ஆட்டத்தில், மும்பை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. புனே கேப்டன் 54 பந்துகளில் விளாசிய 84 ரன்கள் புனே வெற்றிக்கு முக்கிய காரணம்.

2வது லீக் ஆட்டம்

2வது லீக் ஆட்டம்

இவ்விரு அணிகளும் மோதிய இரண்டாவது லீக் ஆட்டத்தில் மும்பை அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இறுதி கட்டத்தில் புனே பவுலிங், ஃபீல்டிங் அருமையாக இருந்தது. ஜெய்தேவ் உனட்கட் வீசிய கடைசி ஓவரால் புனே அணி வெற்றி உறுதிப்பட்டது.

3வது ஆட்டம்

3வது ஆட்டம்

இதையடுத்து இவ்விரு அணிகளும், 3வது முறையாக மோத வேண்டிய நிலை ஏற்பட்டது. புள்ளிப் பட்டியலில் முதல் இரு இடங்ககளை பிடித்ததால் குவாலிபையர்-1 சுற்றில் இவ்விரு அணிகளும்தான் மோதின. அதில் இறுதிகட்டத்தில் டோணி 26 பந்துகளில் 40 ரன்கள் விளாசியதும், புனே, வாஷிங்டன் சுந்தர் பந்து வீச்சும், ஆரம்பத்தில் ரஹானே விளாசிய 56 மற்றும் திவாரியின் 58 ரன்களும் புனே வெற்றிக்கு வழி வகுத்தன. மும்பை அணி அதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் புனேயிடம் தோற்றது. இதையடுத்து குவாலிபையர்-2 போட்டியில் ஹைதராபாத் அணியை தோற்கடித்துவிட்டு பைனலுக்கு வந்து மீண்டும் புனேயுடன் மோதியது மும்பை இந்தியன்ஸ் அணி.

எம்ஜிஆர், ரஜினி

எம்ஜிஆர், ரஜினி

இந்த நிலையில் பைனல் போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. எம்ஜிஆர், ரஜினி படங்களில் 3 முறை அடி வாங்கிவிட்டு ஹீரோ 4வதாக திருப்பியடிப்பாரே அப்படி திருப்பி கொடுத்துள்ளது மும்பை.

Story first published: Monday, May 22, 2017, 0:06 [IST]
Other articles published on May 22, 2017
English summary
Mumbai Indians team defeated Pune for the first time in this IPL season, and the win is comes at the Final.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X