‘தல’ தோனிக்கும், ‘தளபதி’ கோலிக்கும் தேங்க்ஸ் சொன்ன ஆஸி. வீரர்.. காரணம் தெரிஞ்சா நீங்களும் ஹேப்பி

மெல்போர்ன்:மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆரோன் பின்ச் பாராட்டி இருப்பதோடு, நன்றியும் தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் இந்தியா வந்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டி 20, ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. இரு தொடர்களையும் கைப்பற்றி ஆஸ்திரேலியா அசத்தியது.

அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக இருந்தவர் ஆரோன் பின்ச். தொடர் முடிந்து திரும்பிச் செல்லும்போது அவருக்கு இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் முன்னாள் கேப்டன் தோனி ஆகியோர் தங்களது ஜெர்சிகளை அன்பு பரிசாக கொடுத்து அனுப்பினர்.

செம அதிரடி.. சிக்ஸ் மழை.. இதான்பா உண்மையான டி20.. மிரட்டிய ரஸ்ஸல்.. கதிகலங்க வைத்த ஹர்திக் பண்டியா!

இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம்

தற்போது அந்த இரு ஜெர்சிகளை தன் கையால் பிடித்தபடி எடுத்து கொண்டுள்ள புகைப்படத்தை ஆரோன் பின்ச் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

நன்றி கூறுகிறேன்

நன்றி கூறுகிறேன்

அதில் அவர் கூறியிருப்பதாவது: அனைத்து காலத்திலும் சிறந்தவர்களாக போற்றப்படும் வீரர்கள் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு நன்றி. இந்த இரு வீரர்களுடன் விளையாடிய தருணங்கள் சிறப்புமிக்கவை. அந்த நேரங்கள் தனக்கு கிடைத்ததற்காக பெருமை கொள்கிறேன் என்று பின்ச் தெரிவித்துள்ளார். அவரது புகைப்படம் மற்றும் பதிவு வைரலாக பரவி வருகிறது.

உலக கோப்பை கிரிக்கெட்

உலக கோப்பை கிரிக்கெட்

அடுத்த மாதம் 30ம் தேதி இங்கிலாந்தில் உலக கோப்பை துவங்கவுள்ளது. அதில் முதல் லீக் போட்டியில் தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்ளும் இந்திய அணி , 2வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்கிறது.

வருகையால் பலம்

வருகையால் பலம்

இதில் இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிகளாக கருதப்படுவதால் போட்டி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரையில் அந்த அணியின் நட்சத்திர் வீரர்களான டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரின் வருகை அந்த அணிக்கு கூடுதல் பலமாக இருக்கிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Finch thanks all time greats, dhoni and kohli for wonderful gesture.
Story first published: Monday, April 29, 2019, 11:26 [IST]
Other articles published on Apr 29, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X