For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஐசிசி புதிய விதிகளில் சிக்கிய முதல் வீரர் யார் தெரியுமா?

By Staff

டெல்லி: பல்வேறு புதிய விதிகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் கொண்டு வந்தது. இந்த புதிய விதிகளில் சிக்கிய முதல் வீரர், ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து அணியின் லாபஸ்சாக்னே. இவருடைய செய்கையால் எதிரணிக்கு, 5 ரன்கள் கிடைத்தது.

கிரிக்கெட் விளையாட்டில் பல்வேறு புதிய விதிகளை ஐசிசி அறிமுகம் செய்துள்ளது. பேட்டின் அளவு, ஆக்ரோஷமாக விளையாடும் வீரருக்கு, கால்பந்தில் உள்ளது போல் ரெட் கார்டு கொடுப்பது உள்பட பல்வேறு புதிய விதிகளை ஐசிசி கொண்டு வந்துள்ளது.

Aus player first victim


இந்த விதிகள், செப். 29ல் அறிமுகம் ஆனது. இந்த புதிய விதிகளில் சிக்கிய முதல் வீரர், ஆஸ்திரேலியாவின் உள்ளூர் அணியான குயின்ஸ்லாந்தின் லாபஸ்சாக்னே.

நம்மூர் ரஞ்சி கோப்பை போட்டி போல, ஆஸ்திரேலியாவில்நடக்கும் உள்ளூர் ஒருதினப் போட்டியான ஜேஎல்டி கோப்பை போட்டியில், பீல்டிங்கில் இருந்த மார்னல் லாபஸ்சாக்னே, கையில் பந்து சிக்காதபோதும், விக்கெட் கீப்பரை நோக்கி பந்து எறிவது போல் செய்கை செய்தார்.

ஐசிசி விதிகளின்படி, பேட்ஸ்மேன்கள் ஏமாற்றும் வகையில் செய்யும் சைகைகள், பேச்சுகள் குற்றமாகும். அதன்படி, பேட்ஸ்மேனை ஏமாற்றும் வகையில் நடந்ததற்காக, லாபஸ்சாக்னே செய்தது தவறு என்று மைதானத்தில் இருந்த அம்பயர்கள் கூறினர்.

இதனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா-11 அணிக்கு 5 ரன்கள் கிடைத்தது. இந்தப் போட்டியில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா-11 அணி வென்றது. 61 பந்துகளில் 62 ரன்கள் எடுத்த லாபஸ்சாக்னே, இந்தப் போட்டியில் ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ஹைலைட்.
Story first published: Sunday, October 1, 2017, 11:02 [IST]
Other articles published on Oct 1, 2017
English summary
Australia’s Queensland player Marnus Labuschagne first victim of ICC rules
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X