ரஞ்சியில் வரலாறு படைத்த விதர்பா.. அரை இறுதிக்கு முன்னேறியது

By Staff

டெல்லி: ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டின் 83 ஆண்டுகால வரலாற்றில், விதர்பா கிரிக்கெட் அணி முதல் முறையாக அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. அரை இறுதியில் கர்நாடகாவை சந்திக்கிறது. மற்றொரு அரை இறுதியில் டெல்லியும் பெங்காலும் மோதுகின்றன.

உள்ளூர் கிரிக்கெட் போட்டியான ரஞ்சிக் கோப்பை கிரி்க்கெட் போட்டி, 1934 முதல் நடந்து வருகிறது. இந்த ஆண்டு, 21 மாநிலங்கள் உள்பட, 28 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன.

பல சுற்றுகள் நடந்துள்ள போட்டி அரை இறுதியை எட்டியுள்ளது. கால் இறுதியில் கேரளாவை வென்று அரை இறுதிக்கு முதல் முறையாக விதர்பா முன்னேறியது. முன்னதாக ஒரு ஆட்டத்தில் கூட வெற்றி பெறாமல், தமிழக அணி லீக் சுற்றிலேயே வெளியேறியது.

கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில்

கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில்

காலிறுதியில் கேரளாவுக்கு எதிரான ஆட்டத்தில் விதர்பா அணி, 412 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. விதர்பா அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 9 விக்கெட் இழப்புக்கு 507 ரன்கள் எடுத்தும் டிக்ளேர் செய்தது. கேரளா முதல் இன்னிங்சில் 176 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் 165 ரன்களுக்கும் சுருண்டது.

கர்நாடகா வென்றது

கர்நாடகா வென்றது

மற்றொரு கால் இறுதியில், 41 முறை கோப்பை வென்ற மும்பை அணியை, ஒரு இன்னிங்ஸ், 20 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடகா வென்றது. மும்பை முதல் இன்னிங்சில் 173 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கர்நாடகா தனது முதல் இன்னிங்சில் 570 ரன்கள் குவித்தது. இரண்டாவது இன்னிங்சில் மும்பை 377 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியது.

டில்லிக்கு அரை இறுதி

டில்லிக்கு அரை இறுதி

மத்தியப் பிரதேசத்துக்கு எதிரான காலிறுதியில் இந்திய அணியின் முன்னாள் ஓப்பனர் கவுதம் கம்பீர் 95 ரன்கள் அடித்து, டில்லிக்கு அரை இறுதி வாய்ப்பை உறுதி செய்தார். மத்தியப் பிரதேசம் முதல் இன்னிங்சில் 338 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 283 ரன்களும் எடுத்தது. டில்லி முதல் இன்னிங்சில் 405 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 217 ரன்களும் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

நடப்பு சாம்பியனை வென்ற பெங்கால்

நடப்பு சாம்பியனை வென்ற பெங்கால்

மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் குஜராத் அணியை வென்று பெங்கால் அரை இறுதிக்கு முன்னேறியது. பெங்கால் முதல் இன்னிங்சில் 354 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய குஜராத், 224 ரன்களுக்கு சுருண்டது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய பெங்கால், 6 விக்கெட் இழப்புக்கு 695 ரன்கள் எடுத்தது.

டெல்லி – பெங்கால், கர்நாடகா – விதர்பா

டெல்லி – பெங்கால், கர்நாடகா – விதர்பா

அதையடுத்து ஆட்டம் டிராவில் முடிந்தது. முதல் இன்னிங்சில் பெற்ற முன்னிலையின் அடிப்படையில் பெங்கால் அரை இறுதிக்கு முன்னேறியது. வரும் 17ம் தேதி துவங்கும் அரை இறுதி ஆட்டங்களில் டெல்லி - பெங்கால், கர்நாடகா - விதர்பா அணிகள் மோத உள்ளன.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Vidharbha enters semi finals of the Ranji Trophy
Story first published: Wednesday, December 13, 2017, 9:57 [IST]
Other articles published on Dec 13, 2017
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X