“என்னதான் சொல்ல வராரு”.. டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்..ஷேன்வார்னே பதிலால் குழம்பிய ரசிகர்கள்

அமீரகம்: டி20 உலகக்கோப்பை தொடரில் எந்த அணி வெற்றி பெறும் என ஷேன் வார்னே கூறியுள்ள கணிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டி20 உலகக்கோப்பை மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.

கடந்த அக்டோபர் 17ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் தற்போது தகுதிச்சுற்றுப்போட்டிகள் நடைபெற்று வருகின்றன. சூப்பர் 12 ஆட்டங்கள் வரும் அக்.23ம் தேதி முதல் தொடங்குகிறது.

டி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வுடி20 உலகக்கோப்பையில் கவனம் ஈர்த்த 12வயது சிறுமி.. நன்றிகடன்பட்ட கிரிக்கெட் வாரியம்..சுவாரஸ்ய நிகழ்வு

போட்டிப்போடும் அணிகள்

போட்டிப்போடும் அணிகள்

இந்த முறை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் டி20 உலகக்கோப்பை தொடர் நடத்தப்படுவதால் எந்தவொரு அணிக்கும் ஹோம் அட்வாண்டேஜ் இல்லாதது போன்று உள்ளது. எனினும் இங்கு கடந்த ஒருமாத காலமாக இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் விளையாடி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். இதே போல பாகிஸ்தான் அணி பல்வேறு சர்வதேச போட்டிகளை அமீரகத்தில் தான் விளையாடி இருப்பதால் நல்ல பயிற்சி உள்ளது. இது ஒருபுறம் இருக்க அமீரகத்தில் உள்ள துபாய் மைதானத்தை தவிர மற்ற 2 மைதானங்களும் சிறியதாக இருக்கும் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிக்ஸர்களை பறக்கவிட ஏதுவாக உள்ளது.

ஷேன் வார்னேவின் கணிப்பு

ஷேன் வார்னேவின் கணிப்பு

எனவே இந்த முறை எந்த அணி கோப்பையை வெல்லும் என்ற கேள்வி தான் தற்போது சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ளது. இந்நிலையில் அதற்கு ஷேன் வார்னே தனது கணிப்பை தெரிவித்துள்ளது. அதில், இந்தியா அல்லது இங்கிலாந்து அணி டி20 உலகக்கோப்பையை வெல்லும் என நான் நினைக்கிறேன் என முதல் வாக்கியங்களாக குறிப்பிட்டுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் தெரிவித்த கருத்துக்கள் ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.

ரசிகர்கள் குழப்பம்

ரசிகர்கள் குழப்பம்

அதாவது, இந்தியா அல்லது இங்கிலாந்து கோப்பையை வெல்லலாம், ஐசிசி தொடர்களில் நியூசிலாந்து அணிக்கூட சிறாப்பாக தான் விளையாடுகிறது. இதே போல ஆஸ்திரேலிய அணியை அனைவரும் குறைத்து மதிப்பிடுகிறோம். ஆனால் அங்கு நிறைய சிறந்த வீரர்கள் உள்ளனர். அதன் பிறகு பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி நல்ல படையை வைத்துள்ளது. இதனால் எந்த அணி வெற்றி பெறும் என்பதை காண ஆவலுடன் இருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.

இந்திய அணிக்கு வாய்ப்பு

இந்திய அணிக்கு வாய்ப்பு

ஷேன் வார்னேவின் இந்த கருத்தில் இறுதியாக என்னதான் கூற வருகிறார் என ரசிகர்கள் குழம்பியுள்ளனர். எனினும் அவர் குறிப்பிட்டுள்ள வார்த்தைகளில் இந்திய அணிக்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏற்கனவே நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணியை இந்திய வீரர்கள் புரட்டி எடுத்தனர். எனவே கோலி இந்த முறை நிச்சயம் கோப்பையை வென்று கொடுப்பார் என ரசிகர்கள் நம்பிக்கையாக உள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Australia Cricketer Shane Warne predicts His Two Favourites For T20 World Cup
Story first published: Friday, October 22, 2021, 19:07 [IST]
Other articles published on Oct 22, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X