For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் ஒரு ஏமாற்றுக்காரர்..!! மோசடி பண்றாரு..!! கேப்டனின் பித்தலாட்டத்தை போட்டு உடைத்த முக்கிய நபர்

கேன்பரா: லார்ட்ஸ் டெஸ்டில் ஜோ ரூட் பிடித்த கேட்ச் ஏமாற்றுத்தனமானது என்று ஆஸி. அணியின் முன்னாள் வீரர் ஆண்டி பைச்சல் குற்றம்சாட்டி இருக்கிறார்.

லார்ட்ஸ் டெஸ்ட் 2-வது இன்னிங்ஸில் ஸ்மித்தை பந்தால் விரட்டி(கழுத்தில் அடி வாங்க வைத்து) விரட்டினார் ஆர்ச்சர். வலி தாங்க முடியாமல் இன்னும் சிகிச்சையில் இருக்கிறார் அவர்.

இங்கிலாந்துக்கு எதிரான அடுத்த டெஸ்ட் போட்டியில் அவர் விளையாடவில்லை என்று அணி நிர்வாகம் அறிவித்திருக்கிறது. வேண்டும் என்றே அவருக்கு பவுன்சர் போட்டு போட்டியில் இருந்து வெளியேற்றியதாக இங்கிலாந்து அணியின் மீது பரவலாக குற்றச்சாட்டும் முன் வைக்கப்படுகிறது.

சர்ச்சைக்குரிய கேட்ச்

சர்ச்சைக்குரிய கேட்ச்

ஸ்மித் விளையாடாத போது, அவருக்கு பதிலாக மாற்று வீரராக களம் கண்டவர் மார்ஸ் லாம்பஷே. அவரும் அழகாக அரைசதம் அடித்தார். ஆனால், அவரும் அவுட்டானார். அவர் ஆட்டமிழக்கக் காரணமானது ஜோ ரூட் பிடித்த சர்ச்சைக்குரிய கேட்ச்.

வாக்குவாதம் செய்தார்

வாக்குவாதம் செய்தார்

காரணம்... அந்த கேட்ச் ரீப்ளேயில் பார்த்த போது தரையில் பட்டுத்தான் பிடித்தார் என்பது தெரிந்தது. அதனால் மார்ஷ் லாம்பஷே கோபப்பட்டு, ஜோ ரூட்டிடம் வாக்கு வாதமும் செய்தார். இந்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது.

முன்னாள் வீரர் புகார்

முன்னாள் வீரர் புகார்

இந்த சம்பவம் குறித்து ஆஸி. முன்னாள் வீரர் ஆண்டி பைச்சல், சில குற்றச் சாட்டுகளை முன் வைத்து இருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: அந்த பந்து நேரடியாக தரையில் படாமல் செல்லவில்லை. கேட்ச்சை தரையில் பட்டுத்தான் எடுத்தோம் என்பதை ரூட்டுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.

மோசமானது

மோசமானது

மைதானத்தில் கேட்ச் பிடிக்கும் போது, அது பீல்டருக்குத் தெரியாமல் நிச்சயம் இருக்கவே இருக்காது. எனவே, ரூட் செய்தது ஒரு வெளிப்படையான ஏமாற்று வேலை. இதைவிட மோசமானது ஒன்று இருக்கிறது. ரீப்ளேயை மார்ஷ் லாம்பஷே பார்த்து ரூட்டிடம் வாக்கு வாதம் செய்தார்.

தவறு செய்கிறார்

தவறு செய்கிறார்

அதன் பிறகும் அவரை ஏன் வெளியே அனுப்புவதில் குறியாக இருந்தார். அது மிகப்பெரிய தவறு. ஜோ ரூட்டுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கிறது. சமீப காலமாக அவர் பேட்டிங்கில் சொதப்புகிறார். ரன்கள் எடுப்பதில்லை, கடும் மன அழுத்தத்தால், இது போன்ற தவறுகளை அவர் செய்து வருகிறார் என்றார்.

Story first published: Wednesday, August 21, 2019, 11:28 [IST]
Other articles published on Aug 21, 2019
English summary
Former Australian player andy bichel criticized england captain joe root.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X