For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கடும் மாரடைப்பு.. ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் மும்பையில் திடீர் மரணம்!

மும்பை: ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் வீரர் டீன் ஜோன்ஸ் இன்று மும்பையில் காலமானார்.

ஐபிஎல் 2020 தொடர் தொடங்கி தற்போது நடந்து வருகிறது. இந்த நிலையில் ஐபிஎல் வர்ணனையாளர் குழுவில் பணியாற்றி வந்த ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஜாம்பவான் டீன் ஜோன்ஸ் இன்று காலமானார்.

மும்பையில் தங்கி இருந்த அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.

 ஏற்றுக்கொள்ளவே முடியாது.. என்ன ஏற்றுக்கொள்ளவே முடியாது.. என்ன "நான்சென்ஸ்" இது.. தோனியை கடுமையாக விமர்சித்த பீட்டர்சன்.. பரபரப்பு!

டீன் ஜோன்ஸ் யார் ?

டீன் ஜோன்ஸ் யார் ?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் 10 வருடங்கள் தனக்கு என்று தனி இடத்தை கொண்டு, ராஜ்ஜியம் நடத்தியவர்தான் டீன் ஜோன்ஸ். முக்கியமாக ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் இவர் முக்கியமான வீரராக கருதப்பட்டார். ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முகத்தை மாற்றியவர்களில் இவரும் ஒருவர் என்று வர்ணிக்கப்பட்டார்.

எப்போது வந்தார்

எப்போது வந்தார்

1984ல் இவர் ஆஸ்திரேலியாவின் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளில் ஆடினார். இவர் மொத்தம் 52 டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணிக்காக ஆடி உள்ளார. அதேபோல் 164 ஒருநாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவிற்காக ஆடியுள்ளார் . 1994ல் இவர் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்றார்.

எத்தனை போட்டிகள்

எத்தனை போட்டிகள்

மொத்தம் இவர் டெஸ்ட் போட்டிகளில் 3631 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 11 சதம் மற்றும் 7 அரை சதம் அடக்கம். ஒருநாள் போட்டிகளில் 6068 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 7 சதம் மற்றும் 46 அரை சதம் அடக்கம். இவர் வலது கை பேட்ஸ்மேன். அதேபோல் வலது கை ஆப் ஸ்பின் போடக்கூடியவர்.அதிலும் இவர் சென்னையில் இந்தியாவிற்கு எதிராக 1984ல் அடித்த இரட்டை சதம் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது.

பயிற்சியாளர் பதவி

பயிற்சியாளர் பதவி

அதேபோல் ஓய்வுக்கு பின் இவர் பல்வேறு ஆஸ்திரேலியா மாநில அணிகளுக்கு பயிற்சி கொடுத்து உள்ளார். இந்திய அணியின் பயிற்சியாளராக 2003-04ல் முயன்றார். ஆனால் இவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்திய பயிற்சியாளர் ஆக முடியவில்லை என்று தனது வருத்தத்தை அப்போதே வெளிப்படுத்தி இருந்தார்.

வர்ணனை எப்படி

வர்ணனை எப்படி

2016ல் இருந்து இவர் சர்வதேச போட்டிகளில் பலவற்றில் வர்ணனை செய்தார். சில சமயம் வர்ணனையில் தவறாக பேசி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் . பிஎஸ்எல், ஐபிஎல், ஐசிசி உலகக் கோப்பைகளில் இவர் வர்ணனை செய்துள்ளார். தற்போது ஐபிஎல் போட்டிகளில் வர்ணனை செய்ய மும்பை வந்தவர் இன்று மாரடைப்பு காரணமாக காலமானார் .

Story first published: Thursday, September 24, 2020, 16:45 [IST]
Other articles published on Sep 24, 2020
English summary
Former Australian player Dean Jones dies in Mumbai today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X