For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக சீனிவாசன் மீண்டும் தேர்வு!

By Veera Kumar

சென்னை: ஐசிசி சேர்மன் என்.சீனிவாசன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் கிரிக்கெட் அணியின் உரிமையாளரான சீனிவாசன், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகவும் பதவி வகிப்பது சரியில்லை என்று உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியதை தொடர்ந்து அந்த பதவியை ஜக்மோகன் டால்மியாவுக்கு விட்டுக்கொடுத்தார் சீனிவாசன்.

Former BCCI chief Srinivasan re-elected TNCA President

அதேநேரம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி சேர்மனாகவும், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவராகவும் சீனிவாசன் தொடர்ந்து வருகிறார். இந்நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் 85வது ஆண்டு பொதுக் குழு கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் புதிய உறுப்பினர்கள் தேர்வு நடைபெற்றது. சீனிவாசன் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒருமனதாக இந்த தேர்வு நடைபெற்றது.

செயலாளராக காசி விஸ்வநாதனும், பொருளாளராக வி.பி.நரசிம்மனும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்பதவிகளுக்கான காலம், ஓராண்டாகும்.

Story first published: Friday, June 12, 2015, 16:12 [IST]
Other articles published on Jun 12, 2015
English summary
Former BCCI chief and current ICC Chairman N Srinivasan was today unanimously re-elected President of the Tamil Nadu Cricket Association in its 85th Annual General Meeting here today.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X