For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யாராலும் மாத்த முடியாது.. அந்த அணிக்கு தான் உலக கோப்பை…! அடித்துச் சொல்லும் முன்னாள் கேப்டன்

மும்பை:இந்த முறை உலக கோப்பை இந்தியாவுக்கு தான் என்று அடித்துச் சொல்கிறார் முன்னாள் இந்திய கேப்டன் முகமது அசாரூதின்.

கிரிக்கெட் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற உலக கோப்பை திருவிழா தொடங்க 2 வாரங்களே இருக்கின்றன. உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை காண ஆயத்தமாகி வருகின்றனர். போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளும் அறிவிக்கப்பட்டுவிட்டன.

இந்த முறை யாருக்கு உலக கோப்பை என்ற கேள்வி ஒட்டுமொத்த கிரிக்கெட் ஜாம்பவான்களும் 2 அணிகளை கைகாட்டுகின்றனர். ஒன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து... மற்றொன்று இந்தியா. ஆனால் அதையும் தான் உலக கோப்பையை வெல்ல தகுதியும், திறமையும் உள்ள ஒரே அணி என்று அடித்துச் சொல்கிறார் முன்னாள் கேப்டன் முகமது அசாரூதின்.

முதல் பெண் மேட்ச் ரெப்ரீ.. கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜிஎஸ் லக்ஷ்மி! முதல் பெண் மேட்ச் ரெப்ரீ.. கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்த ஜிஎஸ் லக்ஷ்மி!

நல்ல அணி இருக்கிறது

நல்ல அணி இருக்கிறது

இது பற்றி அவர் கூறியிருப்பதாவது: இந்த உலக கோப்பையை வெல்ல அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. நல்ல அணி நம்மிடம் இருக்கிறது. சிறப்பாக பவுலிங் வீசுபவர்களை பெற்றிருக்கிறோம். பவுலிங்கிற்கு சாதகமான ஆடுகளம்... அது இந்திய அணிக்கு பாதிப்பு என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.

துல்லிய பந்துவீச்சு

துல்லிய பந்துவீச்சு

எதிரணி பேட்ஸ்மென்களின் விக்கெட்டுகளை வீழ்த்த துல்லியமான பந்து வீச்சாளர்கள் நம்மிடையே இருக்கின்றனர். ஆக சிறந்த அணியை வைத்து கொண்டிருக்கிறோம். இப்படிப்பட்ட நிலையில், உலக கோப்பையை வெல்லவில்லை என்றால் நான் மிகுந்த அதிருப்தியடைவேன் என்று கூறினார்.

சிறப்பான ஆட்டம்

சிறப்பான ஆட்டம்

உலக கோப்பை தொடர் வரும் 30ம் தேதி தொடங்குகிறது. கோலி தலைமையிலான இந்திய அணி சில ஆண்டுகளாக சிறப்பான பார்மில் இருக்கிறது. முன் எப்போதையும் விட வேகப்பந்து வீச்சு பக்காவாக இருக்கிறது.. பும்ரா, புவனேஷ்வர் குமார்,சமி ஆகியோர் எதிரணிகளை அச்சுறுத்துவர்.

ஸ்பின் பவுலிங் சூப்பர்

ஸ்பின் பவுலிங் சூப்பர்

சுழலில், குல்தீப், சாஹல் ஜோடி அற்புதமான பார்மில் இருக்கிறது. பேட்டிங்கும் வலுவாக உள்ளதால் ரசிகர்களும் இந்தியா தான் உலக கோப்பை சாம்பியன் என்று ரசிகர்களும் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

நெருக்கடி ஏற்படுத்தும்

நெருக்கடி ஏற்படுத்தும்

இந்திய அணி மீதான அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையே, வீரர்களுக்கு ஒரு விதத்தில் நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வீரர்கள் ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தி, ஒவ்வொரு போட்டியையும் முக்கியமாக கருதி விளையாட வேண்டும் என்பது தான் அனைவரின் எதிர்பார்ப்பு.

Story first published: Wednesday, May 15, 2019, 11:04 [IST]
Other articles published on May 15, 2019
English summary
Former captain of india Mohammad Azharuddin predicts that India will be champion of ICC World cup 2019.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X