For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு ரபாடா, புவனேஸ்வர் குமார் பவுலிங் என்றால் ரொம்ப பயம்..! உண்மை பேசிய அவர்...!!

Recommended Video

இவர்களின் பவுலிங் என்றால் எனக்கு பயம்.. உண்மையை கூறிய டிராவிட்- வீடியோ

மும்பை: இப்போது களத்தில் இருந்தால் ரபாடா, புவனேஸ்வர் குமார் பவுலிங் என்னை மிரள வைக்கும் என்று இந்திய கிரிக்கெட்டின் பெருங்சுவர் டிராவிட் கூறி இருக்கிறார்.

ஜென்டில்மேன் விளையாட்டு எனப்படும் கிரிக்கெட்டின் ஜென்டில்மேன் என்று புகழப்படுபவர் ராகுல் டிராவிட். ஸ்கொயர் கட், டிரைவ் ஷாட்டுகள், ஸ்வீப் ஷாட் என அனைத்திலும் கைதேர்ந்தவர். அவரது ஷாட்டுகளையே பார்ப்பதற்கு என்றே ஒரு ரசிகர் பட்டாளம் இன்றும் உண்டு என்று சொல்லலாம்.

பல முக்கிய ஆட்டங்களில களத்தில் நின்று, இக்கட்டான சூழ்நிலையில் இருந்த் இந்திய அணியை காப்பாற்றியவர். அனைத்து வெளிநாடுகளிலும் சதம் அடித்த ஒரே இந்திய வீரர் என்ற பெருமையும் அவருக்கு உண்டு.

அசாத்திய பயிற்சி

அசாத்திய பயிற்சி

ஓய்வுக்கு பிறகும் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு இந்திய அணியின் ஏ, 19 வயதுக்குட் பட்டோர் அணிகளில் அசாத்திய பயிற்சி கொடுத்து வருகிறார். இந் நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவரிடம் சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது.

டிராவிட்டுக்கு கேள்வி

டிராவிட்டுக்கு கேள்வி

அதற்கு அவர் கூறிய பதில்கள் டாப்கிளாஸ் ரகம். டிராவிட் கூறியது இது தான். இப்ப உள்ள கிரிக்கெட் பந்துவீச்சாளர்களில் யார் எனக்கு நெருக்கடி கொடுப்பார்கள் என்று கேட்கிறீர்கள்?

ரபாடா என்றால் பயம்

ரபாடா என்றால் பயம்

எனக்கு இன்றைய காலகட்ட பந்துவீச்சாளர்களில் இருவரின் பவுலிங்கை எதிர் கொள்வது மிகவும் சிரமம் என்று நினைக்கிறன். ஒருவர் தென் ஆப்ரிக்காவின் ரபாடா. அவரது துல்லியம், வேகம் நிச்சயம் நான் பேட் செய்தால் அச்சுறுத்தும்.

சிரமப்படுவேன்

சிரமப்படுவேன்

அதே போன்று இந்திய அணியிலும் அச்சுறுத்தும் பந்து வீச்சாளர்கள் இருக்கின்றனர். குறிப்பாக சொல்ல வேண்டுமானால் புவனேஸ்வர் குமார். அவரது பந்து வீச்சில் நான் விளையாடினாலும் மிகவும் சிரமப்படுவேன் என்று நினைக்கிறேன்.

இது தான் காரணம்

இது தான் காரணம்

அதற்கு ஒரு காரணம் இருக்கிறது. என்ன வென்றால், அவரது ஸ்விங் பவுலிங் அசத்தலாக இருக்கும். எப்போது, எந்த தருணத்தில் ஸ்விங் ஆகும் என்றே எதிர்பார்க்க முடியாது. பந்து வீச்சை கணிப்பது சற்று சிரமம் என்றார்.

Story first published: Wednesday, July 24, 2019, 13:46 [IST]
Other articles published on Jul 24, 2019
English summary
Former captain Rahul dravid says about modern day bowlers who admired.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X