For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அன்னிக்கு கபில் சொன்னாரு… இன்னிக்கு கவாஸ்கர் சொல்றாரு.. என்னிக்கு தான் பிசிசிஐ சொல்ல போகுதோ

டெல்லி:உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் 4ம் இடத்துக்கு கேஎல் ராகுல் பொருத்தமானவர் என்று முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

2019 உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியை இன்னும் சில நாட்களில் பிசிசிஐ அறிவிக்க உள்ளது. எனினும் பேட்டிங் வரிசையில் 4வது இடத்தில் யார் விளையாடுவார் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.

கே.எல்.ராகுல், ரிஷப் பன்ட், அம்பத்தி ராயுடு, தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகியோரில் ஒருவர் இந்த இடத்திற்கு தேர்வு செய்யப்படுவார் என்று கிரிக்கெட் வட்டாரங்கள் கூறி வந்தன. சமீபத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் சதம் அடித்து அசத்திய கே.எல்.ராகுல் அந்த இடத்தில் விளையாட தகுதியானவர் என கிரிக்கெட் ஆலோசகர்கள் தெரிவித்துள்ளனர்.

இவங்க 2 பேரும் டீம்ல இல்ல.. பவுலர்களும் சரியில்ல.. தோத்துட்டோம்..! புலம்பும் அந்த அணி கேப்டன் இவங்க 2 பேரும் டீம்ல இல்ல.. பவுலர்களும் சரியில்ல.. தோத்துட்டோம்..! புலம்பும் அந்த அணி கேப்டன்

கபில்தேவ் ஆதரவு

கபில்தேவ் ஆதரவு

சூழலுக்கு ஏற்றவாறு விராட் கோலியை நான்காம் வரிசையில் இறக்குவதற்கான திட்டங்களை கூட இந்திய அணி வைத்துள்ளது. 4ம் வரிசையில் சூழலுக்கு ஏற்றவாறு எந்த வீரரையும் எந்த வரிசையிலும் இறக்கலாம். அனைவருமே சிறந்த வீரர்கள் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவும் கூறியிருந்தார்.

ராகுல் தான் சரி

ராகுல் தான் சரி

இந்நிலையில், ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவரும் கேஎல் ராகுலையே உலக கோப்பையில் நான்காம் வரிசையில் களமிறக்கலாம் என முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நம்பிக்கையில் ராகுல்

நம்பிக்கையில் ராகுல்

கடந்த ஐபிஎல் சீசனில் சிறப்பாக ஆடியவர் ராகுல். அதற்கு பிறகு பல சீசன்களில் சொதப்பினார். பார்மில் இல்லாமல் தவித்துவந்த ராகுல், ஐபிஎல்லில் நம்பிக்கையோடு விளையாடி வருகிறார்.

2வது இடம்

2வது இடம்

இதுவரை 317 ரன்களை குவித்து, இந்த சீசனில் இதுவரை அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் வார்னருக்கு அடுத்து 2வது இடத்தில் இருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஐபிஎல்லில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார்.

ஏன் என்று தெரியவில்லை

ஏன் என்று தெரியவில்லை

ராகுல் ஏற்கனவே நான்காம் வரிசையில் இறங்கி ஆடியிருக்கிறார். பின்னர் ராகுலை அந்த இடத்தில் இறக்காதது ஏனோ தெரியவில்லை. ஆனால் ஐபிஎல்லில் சிறப்பாக ஆடிவருகிறார் ராகுல்.

பலன் கிடைக்கும்

பலன் கிடைக்கும்

தொடக்க வீரரால் மிடில் ஆர்டரில் இறங்குவது ஒன்றும் பிரச்னை இல்லை. தொடக்க வீரராலும் மிடில் ஆர்டரில் நன்றாக பேட் செய்ய முடியும். அதனால் ராகுலை 4ம் வரிசையில் இறக்கலாம், நிச்சயம் பலன் கிடைக்கும் என்று கூறி உள்ளார்.

Story first published: Saturday, April 13, 2019, 12:47 [IST]
Other articles published on Apr 13, 2019
English summary
Sunil Gavaskar backs KL Rahul for no. 4 spot in India's World Cup team
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X