For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WATCH: ஆஹா..! கோலி ஆடிய அந்த வளைஞ்சு நெளிஞ்ச ஆட்டம்... பேஷ்.. பேஷ்..! அற்புதம் போங்கள்..!!

போர்ட் ஆப் ஸ்பெயின்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கோலி ஒரு ஷாட்டை ஜாம்பவான் விவியன் ரிச்சர்டஸ் சிலாகித்து பாராட்டி உள்ளார்.

தற்போதைய தலைமுறையினரின் ஆஸ்தான கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் முதன்மையான இடத்தில் இருப்பவர் விராட் கோலி. இந்திய அணியில் அவர் இடம் பெற்று 11 ஆண்டுகள் ஆன நிலையில் பல சாதனைகளை படைத்து வருகிறார்.

டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேன் விராட் கோலி. சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும், சாதனைகளையும் குவித்துவரும் கோலி, சிறந்த பேட்டிங் டெக்னிக்கை பெற்றிருப்பவர். அனைத்து வித ஷாட்டுகளையும் எதிர் கொண்டு திறமையாக ஆடக்கூடியவர்.

43 சதங்கள் சாதனை

43 சதங்கள் சாதனை

குறிப்பாக ஆப் திசையில் அவர் அடிக்கும் ஷாட்டுகள் டாப்கிளாஸ் ரகம். அதில் அவர் ஜாம்பவானும் கூட. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 2 ஒருநாள் போட்டிகளிலும் சதமடித்த கோலி, ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் 43 சதங்களை விளாசி சாதனை படைத்துள்ளார்.

புகழாரம்

புகழாரம்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில், கோலி அடித்த ஒரு ஷாட் இப்போது கிரிக்கெட் உலக ஜாம்பவான்களால் அதிகளவு புகழப்பட்டு வருகிறது. பலரும் பாராட்டிய அந்த ஷாட்டை, கண்டு புகழ் மாலை சூட்டியிருக்கிறார் விவியன் ரிச்சர்ட்ஸ்.

கவர் திசையில் பறந்தது

வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வீசிய 22வது ஓவர் அது. அந்த ஓவரின் 5வது பந்தில்தான் அந்த ஷாட்டை அடித்தார் கோலி. ஸ்டம்புக்கு நேராக ஹோல்டர் வீசிய அந்த பந்தை உடம்பை நளினமாக வளைத்து, எக்ஸ்ட்ரா கவர் திசையில் வெளுத்தார் கோலி.

பாராட்டி தள்ளிய ரிச்சர்ட்ஸ்

பாராட்டி தள்ளிய ரிச்சர்ட்ஸ்

அப்போது கமெண்ட்ரி செய்துகொண்டிருந்தவர் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்ஸ். கோலியின் ஷாட்டை சிலாகித்து நேரடி வர்ணனையிலேயே பாராட்டி தள்ளினார். அவரது உடல் அசைவுகளை உற்று நோக்குங்கள்.... ஓ மேன்.. நான் ஆடிய காலத்தில் இப்படியான ஷாட்டுகளை ஆடியிருப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என்று புகழ்ந்து தள்ளிவிட்டார். இணையத்தில் அவரது இந்த புகழ்மாலை தான் வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.

Story first published: Sunday, August 18, 2019, 15:40 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Former captain viv Richards praises kohli’s extraordinary shot against west indies.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X