For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“36 வயதில் இப்படி ஒரு ஃபிட்னஸா”.. ஸ்டார் வீரரை பார்த்து மிரண்ட ஹர்பஜன்.. இளம் வீரர்களுக்கே சவால்!

மும்பை: இந்திய அணியில் 36 வயதில் கூட ஒரு வீரர் தரமான கம்பேக் கொடுக்க முடியும் என்பதை பார்த்து வியப்படைந்ததாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்தாலும், சில நல்ல விஷயங்களை பெற்றுள்ளது.

3வது போட்டியின் போது பிரஷித் கிருஷ்ணாவின் 3 விக்கெட்கள், சூர்யகுமார் யாதவின் அட்டகாச 39 ரன்கள், தீபக் சஹாரின் அரைசதம் என நல்ல ஆட்டம் அமைந்தது.

இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு-பொலார்ட் தலைமையில் அதிரடி வீரர்கள் தேர்வு..இந்திய தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு-பொலார்ட் தலைமையில் அதிரடி வீரர்கள் தேர்வு..

அசத்திய சீனியர்கள்

அசத்திய சீனியர்கள்

ஆனால் இதனையெல்லாம் விட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சீனியர் வீரர்கள் ரவிச்சந்திரன அஸ்வின், ஷிகர் தவான் ஆகியோர் தரமான கம்பேக் கொடுத்தனர். ஒருபுறம் இந்திய பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இழந்த போது மறுமுணையில் ஷிகர் தவான் 2 அரைசதங்களை விளாசி தனது பணியை செய்துக்கொடுத்தார். ஓராண்டிற்கும் மேலாக வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தவான், இந்த 3 போட்டிகளில் அவர் 79, 29, 61 என தனது கம்பேக்கை கொடுத்தார்.

ஹர்பஜன் வியப்பு

ஹர்பஜன் வியப்பு

இந்நிலையில் அவரை பார்த்து ஹர்பஜன் சிங் வியப்படைந்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், ஷிகர் தவானின் கம்பேக் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. தவானை விட சிறப்பாக விளையாடக்கூடிய இளம் வீரர் யாரேனும் இருக்கிறார்கள்?. அணிக்குள் வந்தவுடனேயே 2 அரைசதத்தை விளாசிவிட்டார். இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகளில் தோல்வியடைந்தாலும், தவான் தனது பணியை முடித்துவிட்டார்.

வயது முக்கியமா?

வயது முக்கியமா?

ஷிகர் தவானின் வயதை காரணம் காட்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டு வருகின்றன. இது ஏன் என எனக்கு புரியவில்லை. சில வீரர்கள் 28, 39, 40 வயதுகளில் எல்லாம் உலகக்கோப்பையில் விளையாடியுள்ளனர். ஆனால் தவானுக்கு 36 வயதனாலும், 23 வயது இஷான் கிஷானை போன்று விளையாடுகிறார். அவர் கம்பேக் கொடுக்கவிலை என யாரேனும் கூறினால், அது நியாயமே இல்லாத செயலாகும். அவரிடம் இன்னும் கிரிக்கெட் உள்ளது என ஹர்பஜன் கூறியுள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

வெஸ்ட் இண்டீஸ் தொடர்

தென்னாப்பிரிக்க தொடரில் அசத்தியிருந்த ஷிகர் தவானுக்கு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடரிலும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 என ஓப்பனிங்கிற்கு வீரர்கள் இருக்கும் போதிலும் தவானுக்கான இடம் உறுதியாகியுள்ளது. இதனால் இனி கேப்டன் ரோகித்துடன் ஜோடி சேர்ந்து ஆட அவர் தான் இருப்பார் எனக்கூறப்படுகிறது.

Story first published: Thursday, January 27, 2022, 17:29 [IST]
Other articles published on Jan 27, 2022
English summary
Harbhajan singh impressed with Indian Star opener's comeback after a long gap
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X