For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"இந்தியா வெற்றி பெறுவது கடினம் தான்" அந்த 2 வீரர்கள் தான் காரணமாவார்கள்.. முன்னாள் வீரர் பளீச்..!

கான்பூர்: இரு முக்கிய வீரர்களால் இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறுவது மிகவும் கடினமான ஒன்று என முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று கான்பூரில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அஸ்வின் படைக்கப்போகும் உலக சாதனை.. ஹர்பஜன் ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு..முதல் டெஸ்டில் நிறைவேறுமாஅஸ்வின் படைக்கப்போகும் உலக சாதனை.. ஹர்பஜன் ரெக்கார்டை முறியடிக்க வாய்ப்பு..முதல் டெஸ்டில் நிறைவேறுமா

இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. சிறப்பான தொடக்கம் கிடைத்ததால் உணவு இடைவேளை வரை ஒரு விக்கெட் இழப்புக்கு 81 ரன்களை சேர்த்துள்ளது.

முக்கிய வீரர்கள் இல்லை

முக்கிய வீரர்கள் இல்லை

இந்த போட்டியில் இந்திய அணியின் சீனியர் வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா, பும்ரா, முகமது ஷமி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் இளம் வீரர்கள் கொண்ட அணியை வைத்துக்கொண்டு அஜிங்கியா ரகானே நியூசிலாந்தை எதிர்கொண்டு வருகிறார். இதில் எப்படி சமாளித்து வெற்றி பெற போகிறது என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

வெற்றி சிரமம் தான்

வெற்றி சிரமம் தான்

இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவது கடினம் தான் என நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கூறியுள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இல்லாதது பின்னடைவு. அவர்கள் இல்லாதது

எவ்வளவு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை. இருவரது வெற்றிடம் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளிக்கிறது.

ஆவலுடன் உள்ளேன்

ஆவலுடன் உள்ளேன்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது முதல் இந்திய அணிக்காக அவர்கள் இருவரும் தூண் போன்று நின்று விளையாடி வருகிறார்கள். அந்த முக்கிய வீரர்கள் நியூசிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடாதது நியூசிலாந்து அணிக்கு சற்று சாதகமாக அமைய வாய்ப்பு உள்ளது. இவர்கள் இருவரும் இன்றி இந்திய அணி எவ்வாறு செயல்படும் என்பதை பார்க்க தான் ஆவலாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் சாதனை

இந்திய அணியின் சாதனை

கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் இந்திய அணி இந்திய மண்ணில் இதுவரை டெஸ்ட் தொடரை இழக்காமல் விளையாடி வருகிறது. இந்த முதல் டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைத்துள்ளது. தொடக்க வீரர் சுப்மன் கில் அரைசதம் அடித்து ரோகித்தின் இடத்தை பூர்த்தி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, November 25, 2021, 18:52 [IST]
Other articles published on Nov 25, 2021
English summary
Former cricketer Ian Smith Disappointed With Team India after gives Rest for Virat Kohli And Rohit Sharma in First Test
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X