“அவரெல்லாம் ஆல்ரவுண்டரே கிடையாது”.. ஹர்திக்கை விளாசிய ஜாம்பவான்.. அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்!

சென்னை: ஹர்திக் பாண்ட்யா குறித்து முன்னாள் வீரர் கபில் தேவ் கடுமையான விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

இந்திய அணியின் முன்னணி இளம் ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா தற்போது பலரின் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளார். இதற்கு காரணம் அவரின் காயம் தான்.

2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யாவுக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு.. அறிமுக போட்டியில் சதம்… இந்திய அணி 345 ரன்களுக்கு ஆட்டமிழப்பு..

சிரமப்படும் பாண்ட்யா

சிரமப்படும் பாண்ட்யா

அதன்பின்னர் ஓராண்டு காலம் வரை ஓய்வில் இருந்த பாண்ட்யாவினால் பழையபடி அதிரடி ஃபார்முக்கு திரும்ப முடியவில்லை. கடந்த 2 ஆண்டுகளாகவே பவுலிங்கில் சரிவர அவர் ஈடுபடுவதில்ல்லை. முழுநேர பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாடி வருகிறார். எனினும் அவருக்கு தொடர்ந்து பிசிசிஐ வாய்ப்பு அளித்து வருகிறது. சமீபத்தில் நடந்த டி20 உலகக்கோப்பை தொடரில் கூட அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதனை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை.

 குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

இதனால் கோபமடைந்த ரசிகர்கள் ஹர்திக் பாண்ட்யா குறித்து இணையத்தில் விமர்சனங்களை அள்ளி வீசி வருகின்றனர். முன்னாள் வீரர் பலரும் ஹர்திக்கை ஏன் இனி அணியில் சேர்க்கிறீர்கள், உடனடியாக அவருக்கு நீண்ட ஓய்வு தர வேண்டும் என தெரிவித்தனர். இதன் விளைவாக பெங்களூரு தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடற்தகுதியை நிரூபிக்க பாண்ட்யா அழைக்கப்பட்டுள்ளார்.

கபில் தேவ் அதிரடி

கபில் தேவ் அதிரடி

இந்நிலையில் தன்னைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்ட்யா ஒரு ஆல்ரவுண்டரே கிடையாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தடாலடியாக கூறியுள்ளார். இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த அவர், என்னைப் பொறுத்தவரை இந்திய அணியின் தற்போதைய 2 ஆல்ரவுண்டர்கள் யாரெனில் ஜடேஜா மற்றும் அஷ்வின் தான். அவர்கள் தான் சிறப்பாக செயல்படுவார்கள்.

Hardik Pandyaவுக்கு Notice அனுப்பும் BCCI! NCAக்கு Report செய்யனும் | OneIndia Tamil
கட்டாயம்

கட்டாயம்

ஹர்திக் பாண்ட்யாவை ஆல்-ரவுண்டராக மதிப்பட வேண்டும் என்றால் அவர் பேட்டிங்கும் செய்ய வேண்டும். பந்துவீச்சிலும் ஈடுபட வேண்டும். ஆனால் அவர் பந்துவீசுவதே கிடையாது. பின்னர் எப்படி அவரை ஆல்-ரவுண்டர் எனக் கூற முடியும்? மீண்டும் முழு உடற்தகுதி பெற்று பந்துவீசினால், ஆல்-ரவுண்டர் எனக் கூறலாம் எனத் தெரிவித்தார். தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்தில் இடம்பெற வேண்டும் என்றால் உடற்தகுதியை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் ஹர்திக் இருப்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former India captain Kapil Dev has come out with a scathing critique of Hardik Pandya. He urges fans to not call Hardik Pandya as All-rounder. The reason for this is his injury.
Story first published: Saturday, November 27, 2021, 11:42 [IST]
Other articles published on Nov 27, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X