அந்த தப்ப பண்ணல.. தோனியின் கேப்டன்சி அப்படி இருந்தது.. புகழ்ந்து தள்ளும் முன்னாள் வீரர்!

சென்னை: இந்தாண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்திய விதம் குறித்து முன்னாள் வீரர் ஒருவர் புகழ்ந்துள்ளார்.

CSK continue to be tactically the best ,Scott Styris credits MS Dhoni | Oneindia Tamil

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்தாண்டு மிகச்சிறப்பாக ஆடி வந்தது. கடந்த ஆண்டு சொதப்பிய நிலையில் இந்தாண்டு விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தது.

சின்னவயசு ப்ரெண்ட் மாதிரி நடந்துப்பாரு... ஆனா நம்ம சொல்ற விஷயம் நடக்கலன்னா... மனம்திறந்த ஷமி

இதுவரை இந்தாண்டில் 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடம் பிடித்தது.

 சென்னை அணி

சென்னை அணி

கடந்த சீசனில் பேட்டிங் பவுலிங் என அனைத்து துறைகளிலும் சிஎஸ்கே அணியில் மந்தமாக நிலவியது. ஆனால் இந்தாண்டு அதற்கு மாறாக அணியில் பல மாற்றங்களை செய்து தோனி அசத்தினார். பேட்டிங்கில் ருத்ராஜ், ரெய்னா, டுப்ளசிஸ் ஆகியோரும், பவுலிங்கில் தீபக் சஹார், ஜடேஜா என ஃபுல் ஃபார்மில் அணி இருந்தது.

தோனி கேப்டன்சி

தோனி கேப்டன்சி

அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்ட போதும், கேப்டன் தோனி பெரிய ஆட்டத்தை காட்டவில்லை. மொத்தம் 7 போட்டிகளில் ஆடிய அவர் 37 ரன்களை மட்டுமே அடித்தார். எனினும் அவரின் கேப்டன்சி சிஎஸ்கே ரசிகர்களை வியக்கவைத்தது. கேப்டன்சியில் மீண்டும் பழைய தோனியை பார்க்க முடிந்ததாக கூறப்பட்டது.

பாராட்டு

பாராட்டு

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள ஸ்காட் ஸ்டைரிஸ், களத்திற்கு வெளியேவும் சரி, களத்திற்கு உள்ளேவும் சரி, தோனியின் கேப்டன்சியை பார்த்து நான் வியந்துவிட்டேன். கடந்த ஆண்டு செய்த விஷயங்களை மீண்டும் செய்தால் கண்டிப்பாக சொதப்பும் என்பதை அவர் நன்கு அறிந்திருந்தார். இதனால் அவர்கள் பல மாற்றங்களை செய்தனர். மிகவும் ஸ்மார்ட்டாக செயல்பட்டனர். இந்த சீசனில் திட்டமிடுதலில் சென்னை அணி மிகச்சிறப்பான ஒன்றாக இருந்ததாக நான் நினைக்கிறேன்.

பந்துவீச்சு

பந்துவீச்சு

உதாரணத்திற்கு தீபக் சஹார் - சாம் கரண் ஜோடி. ஆட்டத்தின் தொடக்கத்திலேயே விக்கெட் எடுப்பார்கள். ஆட்டத்தின் மிடில் ஓவர்களில் எதிரணி வீரர்களை தடுமாற செய்து திணற வைப்பார்கள் எனத்தெரிவித்தார். இந்த தொடரில் சாம் கரண் 9 விக்கெட்களும், தீபக் சஹார் 8 விக்கெட்களும் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Cricketer Scott Styris Lauds MSD Captiancy in IPL 2021
Story first published: Sunday, May 9, 2021, 17:52 [IST]
Other articles published on May 9, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X