For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

‘தூக்கி சொல்லு’.. சிஎஸ்கே குறித்த முன்னாள் வீரரின் தவறான எண்ணம்.. தவிடுபொடியாக்கிய கேப்டன் தோனி!

டெல்லி: சென்னை அணியின் இந்தாண்டு செயல்பாடுகள் குறித்து முன்னாள் வீரர் தெரிவித்துள்ள வார்த்தைகள் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வீரர்கள், பயிற்சியார்களுக்கு இடையே கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியதை அடுத்து ஐபிஎல் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அந்த மனசுதான் சார்.. வீட்டிற்கு செல்ல மறுத்த தோனி..என்ன ஆச்சு.. காரணத்தை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள் அந்த மனசுதான் சார்.. வீட்டிற்கு செல்ல மறுத்த தோனி..என்ன ஆச்சு.. காரணத்தை கேட்டு நெகிழ்ந்த ரசிகர்கள்

இந்த தொடரில் சிறப்பாக ஆடி வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்து வந்தது.

மோசமான சீசன்

மோசமான சீசன்

இதுவரை ஐபிஎல் தொடரில் 3 முறை கோப்பையை வென்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கடந்தாண்டும் படுமோசமாக ஆடியது. குறிப்பாக ப்ளே ஆஃப்-க்கு கூட செல்லாமல் வெளியேறி அதிர்ச்சியளித்தது. வீரர்கள் ஒருவர் கூட சிறப்பாக ஆட்டத்தை வெளிப்படுத்த முடியவில்லை.

 ஃபுல் ஃபார்ம்

ஃபுல் ஃபார்ம்

இந்நிலையில் இந்தாண்டு மிகப்பெரும் கம்பேக் கொடுத்தது. இந்த சீசனில் 7 போட்டிகளில் ஆடியுள்ள சிஎஸ்கே 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளது. பேட்டிங்கில் தோனியை தவிர மற்ற அனைவரும் ஃபார்முக்கு திரும்பினர். அதே போல பவுலிங்கில் ஷர்துல் தாக்கூரை தவிர மற்ற அனைவரும் சிறப்பாக செயல்பட்டு வந்தனர்.

நம்பிக்கை இல்லை

நம்பிக்கை இல்லை

இந்நிலையில் இதுகுறித்து பேசிய முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரிஸ், சிஎஸ்கே அணி இந்தாண்டு சிறப்பாக ஆடி, தன் மீதான விமர்சனங்களை பொய்யாக்கி உள்ளது. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவர்கள் மீது நானும் நம்பிக்கை வைக்கவில்லை. மீண்டு வருவார்கள் என எதிர்பார்க்கவில்லை. ஆனால் அது மிகவும் புத்திசாலிதனமான அணி. அற்புதமான முடிவுகளை எடுக்கின்றனர்.

சிறந்த முடிவு

சிறந்த முடிவு

அவர்கள் ரெய்னா மற்றும் அம்பத்தி ராயுடு ஆகியோரை பேட்டிங் வரிசையில் இருந்து கீழ் இறக்கினர். 3வது இடத்திற்கு ரெய்னா தான் முக்கிய வீரராக இருந்தார். ஆனால் அவருக்கு பதிலாக மொயின் அலி சேர்க்கப்பட்டது சிறப்பான ஒன்று. ரெய்னாவின் வயது மற்றும் சமீபத்தில் கிரிக்கெட் ஆடாததால் இந்த சிறப்பான முடிவு எடுக்கப்பட்டது என ஸ்காட் தெரிவித்துள்ளார்.

மொயின்

மொயின்

இங்கிலாந்து அணி ஆல்ரவுண்டர் மொயின் அலி, வழக்கமாக அணியின் பின் வரிசையில் தான் பேட்டிங்கிற்கு களமிறங்குவார். ஆனால் இந்த முறை சிஎஸ்கேவில் வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட அவர் 7 போட்டிகளில் 206 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, May 6, 2021, 14:33 [IST]
Other articles published on May 6, 2021
English summary
Former Cricketer Scott Styris Praised CSK's resurgence in IPL 2021
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X