அந்த ஒரு சம்பவம் போதும்.. சச்சின் - கோலி ஒப்பீடுக்கு சரியான உதாரணம்.. முன்னாள் வீரர் சுவாரஸ்ய பதிவு

மும்பை: இந்திய அணியின் முன்னாள் வீரர் சச்சின் மற்றும் விராட் கோலி ஆகியோருக்கு இடையே உள்ள சுவாரஸ்ய வித்தியாசத்தை முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் தெரிவித்துள்ளார் .

சச்சின் டெண்டுல்கரை போல இந்திய அணியில் தவிர்க்க முடியாத வீரராக விராட் கோலி வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

சோதிச்சிட்டே இருக்காங்களே. நல்லா ஆடுனாலும் அந்த ஒரு விஷயம் பிரச்னை. ப்ரித்வி ஷாவை ஒதுக்கிய பிசிசிஐ

இதனால் இவர்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது இந்திய கிரிக்கெட் உலகில் வழக்கமான ஒன்றாக நடந்துவருகிறது.

சச்சின் முக்கியமானவர்

சச்சின் முக்கியமானவர்

இந்திய அணியின் பேட்டிங் வரிசைக்கு முதுகெலும்பாக சச்சின் திகழ்ந்தார். ஆனால் விராட் கோலி தற்போது சச்சினின் சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் விளையாடுவது போன்று தெரிகிறது. அதன்படி ஒவ்வொரு சாதனையாக முறியடித்தும் வருகிறார்.

இருவருக்குமான வித்தியாசம்

இருவருக்குமான வித்தியாசம்

இந்நிலையில் இவர்களின் ஒப்பீடு குறித்து முன்னாள் வீரர் வெங்கடேஷ் பிரசாத் பேசியுள்ளார். அதில் அவர், அவர்கள் இருவரும் அற்புதமான வீரர்கள். ஆனால் சச்சின் டெண்டுல்கர் மிகவும் மென்மையான குணம் கொண்டவர். விராட் கோலியோ மிகவும் ஆக்ரோஷமானவர். ஆனால் அது அவரின் இயற்கையான குணம் கிடையாது. அணி வெற்றி பெற வேண்டும் என்பதற்காக களத்தில் மட்டும் கோபத்துடன் நடந்துக்கொள்வார்.

சச்சின் குணம்

சச்சின் குணம்

கோலியை போன்று சச்சினிடம் கோபத்தை பார்க்க முடியாது. சச்சின் டக் அவுட் ஆகும் போதும் சரி, டக் அவுட்டாகி வெளியேறும் போதும் சரி, அவரிடம் இருந்து எந்த கோபத்தையும் உங்களால் பார்க்க முடியாது. குறிப்பாக அவருக்கு பந்தால் காயம் ஏற்பட்டால் கூட இமோஷன்களை பார்க்க முடியாது.

சுவாரஸ்ய சம்பவம்

சுவாரஸ்ய சம்பவம்

இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது வசீம் அக்ரம் சச்சினின் முகத்தை தலையை நோக்கி பவுன்சராக வீசினார். அந்த பந்து நேராக சச்சினை காயப்படுத்துவது போன்று வந்தது. ஆனால் சச்சின் அந்த பந்தை சிக்ஸருக்கு விரட்டி அசத்தினார். எனினும் அக்ரமை நோக்கி சச்சின் எந்த கோபத்தையும் காட்டவில்லை.

மிக முக்கியம்

மிக முக்கியம்

இதுவே இந்த சூழலில் விராட் கோலி இருந்திருந்தால், அந்த பந்தை சிக்ஸருக்கு அடித்துவிட்டு வசீம் அக்ரமை முறைத்து பார்த்துவிட்டு ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியிருப்பார். இரண்டு வீரர்களும் இரண்டு குணம் கொண்டவர்கள். ஆனால் இந்திய அணியின் வெற்றிக்கு மிகவும் முக்கியமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Cricketer Venkatesh Prasad Point outs comparison between Sachin and Virat Kohli
Story first published: Saturday, May 8, 2021, 16:15 [IST]
Other articles published on May 8, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X