For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் அவர்” இளம் வீரரை புகழ்ந்து தள்ளிய ஜாம்பவான்கள்..உலகக்கோப்பை உறுதி

வெஸ்ட் இண்டீஸ்: இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலத்தை காப்பாற்ற வந்தவர் என U 19 வீரர் ஒருவரை பல முன்னணி ஜாம்பவான்கள் புகழ்ந்துள்ளனர்.

Recommended Video

U19 World Cup Semi Final-ல் Virat Kohli-ன் சாதனையை சமன் செய்த Yash Dhull

U 19 உலகக்கோப்பை தொடரில் தொடர்ச்சியாக 4வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இந்திய அணி அசத்தியுள்ளது.

நேற்று நடந்த அரையிறுதிப்போட்டியில் முதலில் ஆடிய இந்திய அணி 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 290 ரன்கள் எடுத்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலியா 194 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

இது ஆரம்பம் தான்..!! எதிர்காலம் சிறப்பாக இருக்கு..!! பாராட்டு மழையில் U-19 இந்திய வீரர்கள்..!!இது ஆரம்பம் தான்..!! எதிர்காலம் சிறப்பாக இருக்கு..!! பாராட்டு மழையில் U-19 இந்திய வீரர்கள்..!!

இந்தியாவின் அபார வெற்றி

இந்தியாவின் அபார வெற்றி

37 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்திய அணி, 241 ரன்களுக்கு தான் தனது 3வது விக்கெட்டை இழந்தது. இந்த சிறப்பான ஆட்டத்திற்கு கேப்டன் யாஷ் துல் (110) துணைக்கேப்டன் ( 94 ) 204 ரன்கள் பார்ட்னர்ஷிப் காரணமாக அமைந்தது. இதன் மூலம் இந்திய அணி 291 என்ற கடின இலக்கை ஆஸ்திரேலியாவுக்கு நிர்ணயித்து வெற்றி பெற முடிந்தது.

வாகனின் பாராட்டு

வாகனின் பாராட்டு

இந்நிலையில் இந்திய அணியின் இந்த வெற்றி குறித்து முன்னாள் வீரர்கள் புகழ்ந்து தள்ளியுள்ளனர். இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன், இந்திய U19 அணியிடம் இருந்து உலகத்தரம் வாய்ந்த ஆட்டத்தை பார்த்தேன். இந்திய கிரிக்கெட்டின் எதிர்காலம் மிகவும் பாதுகாப்பாக உள்ளது. அதில் யாஷ் துல் மிக முக்கியமானவர் என வாகன் புகழ்ந்துள்ளார்.

அனுபவமே இல்லை

அனுபவமே இல்லை

இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா போட்டுள்ள ட்வீட்டில், இந்தியாவில் இந்தாண்டு ராஞ்சிக்கோப்பை போன்ற எந்தவொரு முதல் தர போட்டியும் நடக்கவில்லை. அந்த அனுபவங்கள் ஏதும் இன்றி, இந்திய இளம் படை அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு இந்திய அணி சென்றுள்ளது. கோப்பையை வென்று தாய் நாட்டிற்கு கொண்டு வாருங்கள் என தெரிவித்துள்ளார்.

விராட் கோலியின் சாயல்

விராட் கோலியின் சாயல்

கேப்டன் யாஷ் துல்லின் ஆட்டத்தை பார்த்த பல கிரிக்கெட் வல்லுநர்களும் அவர் இந்தியாவின் எதிர்காலம் என புகழ்ந்து வருகின்றனர். ஏனென்றால் அவரின் கேப்டன்சி மற்றும் கிளாசிக் பேட்டிங் ஆகியவை விராட் கோலியை போன்றே இருப்பதாக கூறியுள்ளனர். இதற்கு உதாரணம் " U 19 உலகக்கோப்பையில் சதமடித்த 3வது வீரர் யாஷ் துல் தான் ஆகும்" 2008ல் விராட் கோலி, 2012 உன்முக்த் சந்த் ஆகியோர் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Story first published: Thursday, February 3, 2022, 14:18 [IST]
Other articles published on Feb 3, 2022
English summary
Former Cricketers react to the Team India's victory in the U19 World Cup semi final saying "The future looks secured for the Indian Team"
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X