For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மூளையில்லாத… அறிவுகெட்டவன் கேப்டன் சர்பிராஸ் அகமது..!! தோல்விக்கு பின்னர் பொங்கிய முன்னாள் வீரர்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அஹமதுக்கு அறிவே இல்லை என்று பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் வறுத்தெடுத்துள்ளார்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் 22வது போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை, இந்தியா, டக் வெர்த் லீவிஸ் விதியில் 89 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பாக். தோல்வி அந்த அணியை மட்டுமல்லாது... ஒட்டுமொத்த பாகிஸ்தானையும் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

ஆளாளுக்கு பாக். அணியை மீம்சுகளால் அடித்து தள்ளி வருகின்றனர். எந்த வழியிலும், போராட்ட குணமில்லாமல் பாக். சரண்டாகி விட்டது என்றும் ரசிகர்கள் பொங்கி வருகின்றனர்.

அறிவு இல்லை

அறிவு இல்லை

இந்நிலையில், பாகிஸ்தான் அணி கேப்டன் சர்பிராஸ் அகமதுக்கு கொஞ்சமும் அறிவு இல்லை என பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் விமர்சித்துள்ளார்.

பலமான பவுலிங்

பலமான பவுலிங்

இதுகுறித்து அக்தர் கூறியதாவது: றுகையில், எப்படி கொஞ்சம் கூட அறிவு இல்லாம சர்பிராஸ் எப்படி செயல்படுகிறார் என்று தெரியவில்லை. பாகிஸ்தான் அணியின் பலம் பவுலிங் என்பதை நன்கு தெரிந்தவர்.

டாசில் முடிவு

டாசில் முடிவு

அப்படி இருக்கும் சூழ்நிலையில் தேவையே இல்லாமல் எதற்காக முதலில் பீல்டிங் தேர்வு செய்தார் என்றே தெரியவில்லை. பாகிஸ்தான் டாசில் வென்ற போதே பாக்.கிற்கு 50 சதவீதம் வெற்றி என்பது தெரிந்து விட்டது.

அறிவுகெட்டத்தனம்

அறிவுகெட்டத்தனம்

ஆனால் அறிவு கெட்டத்தனமாக சர்பிராஸ் முடிவை மாற்றி எடுத்து, தேவை இல்லாமல் அணியை தோற்கடிக்க வைத்திருக்கிறார். டாசில் வென்றாகி விட்டது. முதலில் களம் இறங்கி 260 ரன்கள் எடுத்திருந்தாலே போதும்.

இந்தியாவுக்கு நெருக்கடி

இந்தியாவுக்கு நெருக்கடி

சேஸ் செய்யும் போது இந்தியாவுக்கு நெருக்கடி அதிகரித்திருக்கும். அதை எல்லாம் விட்டுவிட்டு, அறிவே இல்லாமல் பவுலிங் தேர்ந்தெடுத்து இருக்கிறார். அதே போல ஹசன் அலியின் பவுலிங்.

பொருத்தமானவர் கிடையாது

பொருத்தமானவர் கிடையாது

மகாமட்டமான பவுலிங். அவர் வீசிய எல்லா பந்துகளும் ஷாட் பிட்ச் ரகம். அவர் டி 20 மற்றும் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் விளையாட தான் லாயக்கு. உலக கோப்பை தொடருக்கு பொருத்தமானவர் இல்லை.

இம்ரான் கான் நிறுத்துங்க

இம்ரான் கான் நிறுத்துங்க

பாகிஸ்தான் அணி வீரர்கள் மிகவும் சாதாரண வீரர்கள் தான். அவர்களிடமிருந்து மிகவும் அதிகமாக ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். அணி நிர்வாகம் ஒட்டு மொத்தமாக சரியில்லை. அவர்களுக்காக பிரதமர் இம்ரான் கான் டுவிட் செய்து ஊக்குவிப்பதை முதலில் நிறுத்த வேண்டும் என்று பொங்கியிருக்கிறார்.

Story first published: Monday, June 17, 2019, 17:34 [IST]
Other articles published on Jun 17, 2019
English summary
Former crickter shoaib akhtar slams sarfaraz ahmed and says brainless captain.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X