"இந்திய அணி எங்களையும் மதிக்கல; டெஸ்ட் கிரிக்கெட்டையும் மதிக்கல" - முன்னாள் இங்கி., வீரர் காட்டம்

லண்டன்: இந்திய அணி கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாடாமல் ரத்து செய்ததன் பஞ்சாயத்து இங்கிலாந்தில் இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் ஒரு பஞ்சாயத்து இது!.

இந்திய அணி நிர்வாகிகள் மத்தியில் கொரோனா பரவியதால், இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது.

தோனியின் பொறுப்பு இதுதான்.. அவரை நியமித்ததற்கு காரணமும் இதுதான்..வாய்த்திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலிதோனியின் பொறுப்பு இதுதான்.. அவரை நியமித்ததற்கு காரணமும் இதுதான்..வாய்த்திறந்த பிசிசிஐ தலைவர் கங்குலி

ரசிகர்கள் இப்போட்டியை பெரியளவில் எதிர்பார்த்திருந்த நிலையில், டாஸ் போடுவதற்கு முன்பே இந்திய அணி களமிறங்க மறுத்துவிட்டது. இரு அணி நிர்வாகங்களும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்திய போதும், இந்திய அணி விளையாட விருப்பம் தெரிவிக்காத நிலையில், போட்டி ரத்து செய்யப்படுவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

பெரும் அதிருப்தி

பெரும் அதிருப்தி

ஆனால், உண்மையில் இந்த இறுதிப் போட்டியை அனைத்து ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இத்தனை ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இல்லாத அளவுக்கு, ஒரு ஆசிய அணி இங்கிலாந்தில் இவ்வளவு டாமினேட் செய்ததாக ரெக்கார்டு இல்லை. நடந்துமுடிந்த 4 போட்டிகளில், 2-1 என்று இந்தியா முன்னிலையில் இருந்தது. இந்தியாவிடம் இருந்து இப்படியொரு தாக்குதல் ஆட்டத்தை இங்கிலாந்து எதிர்பார்க்கவில்லை. தொடரை கைப்பற்ற அபார வாய்ப்பு இருந்த நிலையில், கடைசி டெஸ்ட் ரத்து செய்யப்பட்டது அனைவரையும் அதிருப்திக்கு உள்ளாக்கியது.

இந்திய அணியில் கொரோனா

இந்திய அணியில் கொரோனா

எனினும், இந்திய அணி ஐபிஎல் காரணமாகவே கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டதாக சமூக தளங்களில் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஐபிஎல் போட்டிகளில் விளையாட முடியாமல் போய்விடுமோ என்ற அச்சத்தின் காரணமாகவே, இந்திய அணி வீரர்கள் கடைசி டெஸ்ட் போட்டியில் விளையாட மறுத்துவிட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. முன்னதாக, லண்டன் ஓவலில் நடந்த 4வது டெஸ்ட் போட்டியின் போது அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த பந்து வீச்சு பயிற்சியாளர் பரத் அருண், ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதனால், அவர்கள் 3 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிசியோதெரஃபிஸ்ட் நிதின் பட்டேலும் தனிமைப்படுத்தப்பட்டார்.

Fifth Test cancelled due to India players' refusal, not because of IPL - Ganguly
போட்டி முழுவதும் ரத்து

போட்டி முழுவதும் ரத்து

இந்த சூழலில், இந்திய கிரிக்கெட் அணியின் உதவி பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் பார்மருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவருடன் இந்திய வீரர்கள் நெருங்கி பணியாற்றியதால், இந்திய அணியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்பு வழிகாட்டுதல் நடைமுறைப்படி இந்திய அணியினர் அனைவரும் ஹோட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்டனர். இதனால் வீரர்கள் யாருமே பயிற்சியில் ஈடுபடவில்லை. இதன் பிறகு தான் 5 வது டெஸ்ட் போட்டி முழுவதும் ரத்து செய்யப்பட்டது.

மற்ற வீரர்களின் நிலை?

மற்ற வீரர்களின் நிலை?

இங்கு இந்திய வீரர்கள் தரப்பில் முன்வைக்கப்படும் வாதம் என்னவெனில், பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷ் இந்திய வீரர்கள் அனைவருடனும் நெருக்கமாக இருந்திருக்கிறார். கடைசி டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் விதமாக, அவர் தனி ஆளாக அனைத்து வீரர்களுக்கும் பிஸியோ கொடுத்திருக்கிறார். ஆனால், கடைசி நேரத்தில் அவருக்கே தொற்று ஏற்பட்டதால் தான் வீரர்கள் பயந்ததாக தெரிகிறது. ஏனெனில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஒருவேளை விளையாட ஒப்புக் கொண்டு விளையாடும் பட்சத்தில், 2 அல்லது 3 நாட்களுக்கு பிறகு வீரர்களில் யாருக்காவது கொரோனா ஏற்பட்டால் என்ன செய்வது? அவர் அணியின் 3 நாட்கள் மற்ற வீரர்களுடன் நெருங்கி விளையாடிருப்பார். அப்படியெனில், மற்ற வீரர்களின் நிலை என்னாவது? இதை தவிர்க்கும் பொருட்டே, இந்திய அணி விளையாட மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

ஐபிஎல் தான் காரணம்

ஐபிஎல் தான் காரணம்

இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் வீரர் பவுல் நியூமேன் கூறுகையில், "கிரிக்கெட்டின் பணக்கார தொடரான ஐபிஎல்-ல் விளையாட மறு வாரம் இந்திய வீரர்கள் செல்லும் நிலை இல்லாமல் இருந்திருந்தால், நிச்சயம் தொடரை நிர்ணயிக்கும் அந்த கடைசி டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டிருக்காது. அதுவும் போட்டி தொடங்கும் நாளன்று காலை இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்காது. ஐபிஎல் தொடரில் ஒப்பந்தம் கொண்ட எந்த இந்திய வீரரும் இந்த டெஸ்டில் விளையாடுவதை விரும்பவில்லை. ஒருவேளை யாரேனும் ஒருவருக்கு கொரோனா உறுதியாகி இருந்தாலும், அனைவரும் இங்கிலாந்தில் 10 தனிமைப்படுத்தலில் இருந்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். ஏனெனில், இங்கிலாந்தில் கொரோனா விதிமுறை அது. அப்படி நடந்திருந்தால், செப்டம்பர் 19 அன்று அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் போட்டியில் கலந்து கொண்டு விளையாடியிருக்க முடியாது.

டெஸ்ட் தொடரை மதிக்கவில்லை

டெஸ்ட் தொடரை மதிக்கவில்லை

பிசியோதெரஃபிஸ்ட் யோகேஷுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட உடனேயே, வீரர்கள் அனைவரும் எவ்வளவு சீக்கிரம் இங்கிலாந்தில் இருந்து வெளியேற முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் வெளியேறிவிட வேண்டும் என்று முடிவு செய்துவிட்டனர். அவர்கள் அனைவருக்கும் கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தும் அவர் வெளியேறுவதிலேயே குறியாக இருந்தனர். இந்தியா இந்த தொடருக்கு மதிப்பளிக்கவில்லை. நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்னர் அவர் கோவிட் விதிமுறைகளை மீறி வெளியே சென்று, வைரஸை கையோடு அழைத்து வந்து, இப்போது தொடரை முடிக்காமலேயே இங்கிலாந்தில் இருந்து சென்றுவிட்டனர். மொத்தத்தில் அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டையே மதிக்கவில்லை" காட்டமாக விமர்சித்துள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
paul newman said India did not respect the cricket - ஐபிஎல்
Story first published: Tuesday, September 14, 2021, 13:04 [IST]
Other articles published on Sep 14, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X