For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கோலி 2 வருஷமா இதையே தான் பண்ணிக்கிட்டு இருக்காரு…! மத்தவங்க யாரும் இப்படி இருந்ததே இல்ல..!

போர்ட் ஆப் ஸ்பெயின்: 2 ஆண்டுகளில் ஒருநாள் கூட சாக்குபோக்கு சொல்லாமல், தொடர்ந்து உடற்பயிற்சிக்கு கோலி வருவதாகவும், சிறப்பான உடல் தகுதியுடன் இருப்பதாகவும் முன்னாள் உடற்தகுதி பயிற்சியாளர் சங்கர் பாசு கூறியிருக்கிறார்.

மற்ற அணிகளுக்கு ஈடாக உடற்தகுதி கொண்ட அணியாக இந்திய அணி இருக்கிறது. 2015ம் ஆண்டிலிருந்து 2019ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பிட்னஸ் மற்றும் உடற்தகுதி பயிற்சியாளராக செயல்பட்டு வரும் சங்கர் பாசுவே அதற்கு காரணம் என்று பிசிசிஐ கூறியிருக்கிறது.

அவர் ஆலோசனைகள், வழிகாட்டுதலின் பேரில், வீரர்களின் உடற்பயிற்சியின் அணிக்கு சிறப்பாக இருந்தது. மேலும் வீரர்கள் சிறப்பான உடல் தகுதியுடன் இருந்து வருகின்றனர்.

பயிற்சிக்காலம் முடிந்தது

பயிற்சிக்காலம் முடிந்தது

இங்கிலாந்து உலக கோப்பை தொடருடன் சங்கர் பாசுவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவரது உடற்பயிற்சியின் கீழ் இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பாக செயல்பட்டு தங்கள் உடல் வலிமையோடு தொடர்ந்து கட்டுப்பாட்டுடன் இருந்து வந்தனர். சங்கர் பாசு பதவி காலம் முடிவடைந்தால் இந்திய அணியை விட்டு விலகினார்.

வீரர்கள் வலிமை

வீரர்கள் வலிமை

இந்நிலையில் தற்போது அவர் இந்திய அணி வீரர் குறித்தும் அவர்களது வலிமை குறித்து பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது : இந்திய அணியை பொறுத்த வரைக்கும் கேப்டன் கோலி அணியின் மற்ற வீரர்கள் அனைவருக்கும் முன் உதாரணம்.

கடுமையான பயிற்சி

கடுமையான பயிற்சி

ஏனெனில் கடந்த 2 வருடங்களில் அவர் ஒரு நாள் கூட விடுப்பு எடுக்காமல் உடற்பயிற்சி செய்து வந்தார். எந்தவித சாக்குபோக்கும் சொல்லாமல், அவரது உடற் தகுதியில் மிக கவனமாக இருந்தார்.

சிறப்பான செயல்பாடு

சிறப்பான செயல்பாடு

நான் உடற்பயிற்சி அளிக்க தொடங்கியதில் இருந்து, கடுமையாக உடற்பயிற்சி செய்தார் அதனாலே அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட முடிகிறது. மேலும் அவரிடம் உள்ள பிட்னஸ் மற்ற உலக அணிகள் திரும்பி பார்க்கும் வகையில் உள்ளது என்றார்.

Story first published: Sunday, August 18, 2019, 8:00 [IST]
Other articles published on Aug 18, 2019
English summary
Former fitness trainer subash basu expresses about kohli.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X