For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஆட்டத்தை மாற்றிய நடுவரின் தவறு.... ஸ்டோக்ஸ் ரன்அவுட் சர்ச்சை....முன்னாள் வீரர்கள் கடும் அதிருப்தி!

புனே: 2வது ஒருநாள் போட்டியின் போது பென்ஸ்டோக்ஸ் ரன் அவுட் விவகாரத்தில் நடுவர் வழங்கிய முடிவு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

நேற்று நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 337 ரன்களை விரட்டி அபார வெற்றி பெற்றது. இதற்கு பென் ஸ்டோக்ஸின் ஆட்டம் மிக முக்கியமானது.

மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ! மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா..... உலகக்கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் சலசலப்பு... விவரம் இதோ!

இந்நிலையில் ஆட்டத்தின் போது பென் ஸ்டோக்ஸ் ரன் அவுட்டான போதும் அவருக்கு நடுவர் அவுட் வழங்காதது முன்னாள் வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி தோல்வி

இந்திய அணி தோல்வி

இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 336 ரன்கள் குவித்தது. கடின இலக்கு என அனைவரும் நினைத்த நிலையில் இங்கிலாந்து அணி அசால்டாக 44.3 ஓவர்களில் 4 விக்கெட்களை மட்டுமே இழந்து இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. இதில் சிறப்பாக ஆடிய பேர்ஸ்டோ (124) - பென் ஸ்டோக்ஸ் (99) ஜோடி 175 ரன்கள் பார்ட்னர்ஷிப் கொடுத்து அணியின் வெற்றிக்கு உதவினர். ஆனால் பென் ஸ்டோக்ஸ் முன்கூட்டியே அவுட்டாகி வெளியேறி இருக்க வேண்டியவர்.

அவுட்

அவுட்

போட்டியின் போது 26ஆவது ஓவரை, புவனேஷ்வர்குமார் வீசினார். அவரின் பந்தை அடித்துவிட்டு பென் ஸ்டோக்ஸ் 2 ரன்கள் எடுக்க ஓடினார். அப்போது வேகமாக செயல்பட்ட ஃபீல்டர் குல்தீப் யாதவ், பந்தை எடுத்து விக்கெட் கீப்பரை நோக்கி வீசினார். பந்து நேராகவே ஸ்டம்ப்களில் பட்டது. இதனை எதிர்பார்க்காத பென் ஸ்டோக்ஸ் கஷ்டப்பட்டு ஓடி வர, ரன் அவுட்டாக வாய்ப்பு இருந்தது.

மீண்டும் சர்ச்சை

மீண்டும் சர்ச்சை

இது குறித்து 3வது நடுவருக்கு முறையிட பட்டது. அப்போது அதனை பல முறை ரிவியூவ் செய்து பார்த்த 3வது நடுவர், அவுட் கொடுக்க சரியான ஆதாரம் இல்லை எனவும், பேட் கிறிஸுக்குள் வந்துவிட்டது எனக்கூறி நாட் அவுட் கொடுத்தனர். ஆனால் உண்மையில் பென் ஸ்டோக்ஸின் பேட் கிறிஸுக்கு வரவில்லை. இதுதான் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

முன்னாள் வீரர்கள்

முன்னாள் வீரர்கள்

இது குறித்து ட்வீட் போட்டுள்ள யுவ்ராஜ் சிங், இது அவுட், பேட் கிரிஸ் லைனை தாண்டிவிட்டதாக கூறுகின்றனர். ஆனால், தாண்டியதுபோல்தான் காட்டப்பட்டது என தெரிவித்துள்ளார். அதே போல முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர், 3வது நடுவர் சரியாக கவனிக்கவில்லை போன்று தெரிகிறது. பேட் கிரீஸ் லைனை தாண்டவில்லை என தெரிவித்துள்ளார்.

ஆச்சரிய பதிவு

ஆச்சரிய பதிவு

வழக்கமாக இங்கிலாந்து அணிக்கு ஆதரவாக கருத்து தெரிவிக்கும் இங்கிலாந்து முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் இந்த விஷயத்தில் எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் ட்வீட்டில், வாவ், இதற்கு நான் இருந்தால் நாட் அவுட் கொடுத்திருப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Saturday, March 27, 2021, 17:31 [IST]
Other articles published on Mar 27, 2021
English summary
Former India, England cricketers Reaction for 3rd umpire giving Ben Stokes not out that bat being on the line
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X