For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"பிசிசிஐ துரோகம் இழைத்துவிட்டது" கோலியின் கேப்டன்சி விவகாரம்.. முன்னாள் பயிற்சியாளர் காட்டம்!

மும்பை: விராட் கோலியின் பதவியை பறித்த விவகாரத்தில் இந்திய தேர்வுக்குழுவின் மீது முன்னாள் தலைமை பயிற்சியாளர் கடும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்தியாவின் 50 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, புதிய கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?3 இளம் வீரர்களுக்கு ஏமாற்றம் அளித்த பி.சி.சி.ஐ. – என்ன நடந்தது?

விராட் கோலிக்கு பதவி விலக விருப்பம் இல்லை என்றபோதும், அவருக்கு பிசிசிஐ அநீதி இழைத்து விட்டதாக பலரும் கூறி வருகின்றனர்.

கங்குலியின் விளக்கம்

கங்குலியின் விளக்கம்

இந்த விவகாரத்தில் பிசிசிஐ தலைவர் கங்குலியும் விளக்கம் கொடுத்துவிட்டார். அதில், இந்தியாவின் டி20 மற்றும் ஒருநாள் அணிகளுக்கு தனித்தனி கேப்டன்கள் இருந்தால் அணியில் குழப்பம் ஏற்படலாம். அதன் காரணமாக கோலியை டி20 அணி கேப்டன்சியில் நீடிக்க கூறினோம். ஆனால் அவர் மறுத்துவிட்டதால் தான், தற்போது புதிய கேப்டன் நியமிக்கப்பட்டது எனக்கூறியுள்ளார்.

 முன்னாள் கோச் பதில்

முன்னாள் கோச் பதில்

இந்நிலையில் கங்குலியின் விளக்கத்தை இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் மதன் லால் ஏற்றுக்கொள்ளவில்லை. இதுகுறித்து பேசிய அவர், பிசிசிஐ தேர்வுக்குழு என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் என்பது புரியவில்லை. ஒருநாள் போட்டிகளில் விராட் கோலி சிறப்பான வெற்றிகளை தருகிறார். அப்படி இருந்தும் அவரை ஏன் நீக்க வேண்டும். டி20 போட்டிகள் கூட அதிகம் இருப்பதால் அதில் வேறு கேப்டன் கொண்டு வரலாம். ஆனால் வெற்றிகரமாக இருந்த கேப்டனை மாற்றுவது, அவருக்கு இழைக்கும் அநீதி ஆகும்.

வெவ்வேறு கேப்டன் புதிதல்ல

வெவ்வேறு கேப்டன் புதிதல்ல

ஒரு அணியை அழித்துவிடுவது என்பது சுலபம். ஆனால் புதிதாக கட்டமைப்பது என்பது கடினமான ஒன்று. அதனை மறந்துவிட்டு பிசிசிஐ செயல்படுகிறது. ஏன் தனி தனி கேப்டன் இருந்தால் என்ன தவறு. ஒவ்வொரு கேப்டனுக்கும் ஒவ்வொரு அனுகுமுறை இருக்கும். வெவ்வேறு கேப்டன்களின் கீழ் இந்திய வீரர்கள் விளையாடுவது புதிதல்ல, இதற்கு முன் தோனி டி20, ஒருநாள் அணியை பார்த்துக்கொண்ட போது, டெஸ்ட் அணியை கோலி பார்த்துக்கொண்டார்.

Recommended Video

சதம் அடித்தால் மட்டும் போதாது.. Cup முக்கியம்.. Captaincy குறித்து Rohit கருத்து
அணுகுமுறை என்ன

அணுகுமுறை என்ன

எனவே எந்த கேப்டன்களுக்கு கீழ் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயமே கிடையாது. சர்வதேச போட்டிகளை பொறுத்தவரை ஒவ்வொரு கேப்டனும் வெற்றிகளை கொடுக்கிறார்களா என்பது தான் முக்கியம். எப்படி, எந்த அணுகுமுறையில் கொடுக்கிறார்கள் என்பதை யோசிக்கக்கூடாது என மதன் லால் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Story first published: Friday, December 10, 2021, 22:21 [IST]
Other articles published on Dec 10, 2021
English summary
Former India Head coach slams BCCI for Kohli's captaincy issue
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X