For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேப்டன்சி பறிப்புக்கு பின்னால் டிராவிட்?.. கோலியின் நிலைமைக்கு காரணம் என்ன.. முன்னாள் வீரர் பளீச்!

மும்பை: விராட் கோலியின் கேப்டன்சி பதவி பறிக்கப்பட்டதற்கு பின்னால் ராகுல் டிராவிட் இருக்கிறார் என இந்திய முன்னாள் வீரர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 50 ஓவர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டதால், பிசிசிஐ வட்டாரத்தில் பரபரப்பு சூழல் ஏற்பட்டுள்ளது.

டி20 அணியின் கேப்டனாக சமீபத்தில் நியமிக்கப்பட்ட ரோகித் சர்மா, ஒருநாள் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இதே போல ரகானேவின் டெஸ்ட் துணைக்கேப்டன் பதவியும் ரோகித்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

“கோலி எடுத்த முடிவால் வந்த விணை தான் இது”.. கேப்டன்சி மாற்றத்தில் வற்புறுத்தலா?.. கங்குலி ஓபன் டாக்! “கோலி எடுத்த முடிவால் வந்த விணை தான் இது”.. கேப்டன்சி மாற்றத்தில் வற்புறுத்தலா?.. கங்குலி ஓபன் டாக்!

புதிய சர்ச்சை

புதிய சர்ச்சை

இந்த விவகாரத்தில் தற்போது விராட் கோலிக்கு பிசிசிஐ துரோகம் செய்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இந்திய டி20 அணியின் கேப்டன்சியில் இருந்து தாமாக பதவி விலகிய கோலி, ஒருநாள் அணியை தொடர்ந்து வழிநடத்தவே விரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதனை ஏற்றுக்கொள்ளாத பிசிசிஐ 48 மணி நேரத்தில் பதவி விலக வேண்டும், இல்லையென்றால் நீக்கப்படுவீர்கள் என கெடு விதித்து அனைத்தையும் செய்துள்ளது. எனினும் இதுகுறித்த உண்மை தன்மை தெரியவில்லை.

 சாபா கரீம் பதில்

சாபா கரீம் பதில்

இந்நிலையில் இவை முற்றிலும் உண்மை என இந்திய முன்னாள் விக்கெட் கீப்பர் சாபா கரீம் கூறியுள்ளார். அதில், விராட் கோலி அதிரடியாக பதவியில் இருந்து தூக்கப்பட்டார் என்பதே சரியாக இருக்கும். ஏனென்றால் டி20 கேப்டன்சியில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்ட போதே, ஒருநாள் அணி குறித்து கோலி தெரிவித்திருக்கலாம். அவர் தொடர்ந்து ஒருநாள் அணியை வழிநடத்த விரும்பியதால் தான் அதனை செய்யவில்லை.

கேப்டன்சி

கேப்டன்சி

விராட் கோலி சிறந்த ஒருநாள் அணி கேப்டனாக இருந்துள்ளார். இதுவரை 95 போட்டிகளில் 65 வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அவரின் வெற்றி சதவீதம் 70.43 ஆகும். ஆனால் கடந்த 2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியில் பாகிஸ்தானிடம் தோற்றது, 2019ம் ஆண்டு உலகக்கோப்பையில் நியூசிலாந்திடம் தோற்றது ஆகியவை அவரை பதவி நீக்கம் செய்ய காரணமாகிவிட்டது.

Recommended Video

Rohit Sharma speaks out on his Captaincy Plans | OneIndia Tamil
பின்னணியில் டிராவிட்

பின்னணியில் டிராவிட்

என்னைப் பொறுத்தவரை ராகுல் டிராவிட் அல்லது வேறு யாரேனும் ஒருவர் விராட் கோலியின் பதவி பறிப்புக்கு பின்னால் உள்ளனர் என நினைக்கிறேன். இந்திய அணியில் தனி தனி கேப்டன்சி என்ற முறையை விராட் கோலியிடம் பயிற்சியாளர் டிராவிட் எடுத்துக்கூறியிருக்கலாம். அவரிடம் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்திருக்கலாம். இப்படிப்பட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது என்றால் டிராவிட் நிச்சயம் பின்னர் இருந்து பேசியிருப்பார்.

Story first published: Thursday, December 9, 2021, 23:20 [IST]
Other articles published on Dec 9, 2021
English summary
Former Indian Cricketer Saba Karim makes bold claim on virat kohli's captaincy issue says Virat Kohli 'has been sacked'
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X