For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாஹலை ஜாதி ரீதியாக விமர்சித்த யுவராஜ் சிங்...sc act-ல் கைது, 3 மணி நேரம் விசாரணை.. என்ன நடந்தது?

சண்டிகர்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங். மேட்ச் வின்னராக ஜொலித்த யுவராஜ் சிங் அணிக்கு பல போட்டிகளில் வெற்றி தேடி கொடுத்துள்ளார். கடந்த ஆண்டு ஜூன் மாதம் யுவராஜ் சிங் மற்றும் இந்திய வீரர் ரோஹித் சர்மா ஆகியோர் இன்ஸ்டாகிராம் வீடியோவில் நேரலையில் விவாதம் நடத்தினார்கள்.

Recommended Video

1 வருடம் முன்பு சொன்ன கருத்து.. நேற்று திடீரென கைது செய்யப்பட்ட Yuvraj Singh

டி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமாடி20 உலக கோப்பைக்கு இந்த 8 ஐபிஎல் நட்சத்திரங்கள்.. பிசிசிஐ போட்டுள்ள மாஸ்டர் பிளான்.. பலன் தருமா

அப்போது இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலை சாதிரீதியாக யுவராஜ் சிங் பேசியதாக கூறப்படுகிறது. யுஸ்வேந்திர சாஹல் தலித் சமுதாயத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

யுவராஜ் மீது வழக்குப்பதிவு

யுவராஜ் மீது வழக்குப்பதிவு

எனவே யுஸ்வேந்திர சாஹலை சாதிரீதியாக விமர்சனம் செய்த யுவராஜ் சிங் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஹரியாணாவில் தலித் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் இந்த ஆண்டு பிப்ரவரியில் போலீசில் புகார் கொடுத்தார். வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் யுவராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்ட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.

 யுவராஜ் மன்னிப்பு கேட்டார்

யுவராஜ் மன்னிப்பு கேட்டார்

இந்த கருத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வந்ததால் அப்போதே யுவராஜ் மன்னிப்பு கேட்டார். ''நான் எனது நண்பர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது, தவறான வார்த்தையை உபயோகப்படுத்தி விட்டேன். அது தேவையற்றது. எனினும், ஒரு பொறுப்பான இந்தியனாக நான் வேண்டுமென்றே யாருடைய உணர்வுகளையும் உணர்வுகளையும் காயப்படுத்தியிருந்தால் வருத்தத்தை தெரிவிக்க விரும்புகிறேன்'' என்று கூறி இருந்தார்.

தனி நபரை மதிக்கிறேன்

தனி நபரை மதிக்கிறேன்

மேலும், சாதி, நிறம், மதம் அல்லது பாலின அடிப்படையில் நான் எந்தவித ஏற்றத்தாழ்வையும் நம்பவில்லை. மக்களின் நலனுக்காக என் வாழ்க்கையை தொடர்ந்து கொடுத்துள்ளேன். நான் வாழ்க்கையின் கண்ணியத்தை நம்புகிறேன் மற்றும் விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு தனி நபரையும் மதிக்கிறேன்'' என்றும் யுவராஜ் சிங் தெரிவித்து இருந்தார்.

யுவராஜ் சிங் கைது

யுவராஜ் சிங் கைது

இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக யுவராஜ் சிங்கை ஹரியானா மாநிலம் ஹிசார் போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள். இந்த விவகாரம் தொடர்பாக யுவராஜ் ஏற்கனவே மன்னிப்பு கோரியிருந்ததால் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். ஹிசாரில் உள்ள எஸ்சி, எஸ்டி நீதிமன்றத்தில் சில நாட்களில் போலீசார் தனது இறுதி அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று கூறப்பட்டுள்ளது

ரசிகர்கள் அதிர்ச்சி

ரசிகர்கள் அதிர்ச்சி

யுவராஜ் சிங்குக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால், நாங்கள் அதை உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யவுள்ளோம் என்று வழக்கு தொடர்ந்தவர் கூறினார். யுவராஜ் சிங் கைது செய்யப்ட்டது அவரது ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Story first published: Monday, October 18, 2021, 10:43 [IST]
Other articles published on Oct 18, 2021
English summary
Former Indian cricketer Yuvraj Singh has been arrested by the police. Yuvraj had already apologized and was released on bail on a court order
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X