For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பல நாள் போராட்டத்திற்கு வெற்றி. உழைப்பு வீண் போகாதுப்பா,சூர்ய குமார் யாதவுக்கு பொழியும் வாழ்த்து மழை

சென்னை: நீண்ட நாள் போராட்டங்களுக்கு பின்னர் இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ் இடம்பெற்றுள்ளதற்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

இந்தியா - இங்கிலாந்துக்கு இடையே டெஸ்ட் தொடரை அடுத்து வரும் மார்ச் 14ம் தேதி முதல் டி20 தொடர் நடைபெறவுள்ளது. இதற்கான இந்திய அணி நேற்று வெளியிடப்பட்டது.

இங்கிலாந்து ஜெயிக்க இந்த 5 விஷயங்களை செஞ்சே ஆகனும்..குழப்பத்தில் ரூட்,டிப்ஸ் கொடுத்த மைக்கேல் வாகன்இங்கிலாந்து ஜெயிக்க இந்த 5 விஷயங்களை செஞ்சே ஆகனும்..குழப்பத்தில் ரூட்,டிப்ஸ் கொடுத்த மைக்கேல் வாகன்

இந்நிலையில் இந்திய அணியில் நீண்ட நாள் போராட்டத்திற்கு பின்பு இடம்பிடித்த வீரர்களுக்கு முன்னாள் வீரர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

டி20 தொடர்

டி20 தொடர்

இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடரில் இஷாந்த் கிஷான், சூர்யகுமார் யாதவ், ராகுல் தேவட்டியா ஆகியோருக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீண்ட நாள் போராட்டம்

நீண்ட நாள் போராட்டம்

இதில் இஷாந்த் கிஷான் மற்றும் தேவட்டியா ஆகியோருக்கு கடந்த ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டதற்காக வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் சூர்யகுமார் யாதவ் 2018ம் ஆண்டு முதல் ஐபிஎல்-ல் சிறப்பாக ஆடி வருகிறார். கடந்த சீசனில் மட்டும் 480 ரன்கள் குவித்தார். எனினும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாமல் இருந்தது. இதற்காக ரசிகர்கள் பலர் விராட் கோலியையும் இந்திய தேர்வர்களையும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.

 வெற்றி

வெற்றி

இந்நிலையில் சூர்ய குமார் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறித்து முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான், ஆர்.பி.சிங், ரமேஷ் பொவர், ஜலாஜ் சக்சேனா, வசீம் ஜாஃபர் ஆகியோர் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர். அவர்கள் நீண்ட நாள் ஆசை நிறைவேறிவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

 இளம் படை

இளம் படை

இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, கே.எர்.ராகுல், தவான், ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, இஷான் கிஷான், சாஹல், வருண் சக்கரவர்த்தி, அக்‌ஷர் பட்டேல், வாஷ்ங்டன் சுந்தர், ராகுல் தேவட்டியா, நடராஜன், தீபக் சாஹர், நவ்தீப், ஷர்துல் தாக்கூர், ரிஷப் பண்ட் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.

Story first published: Monday, February 22, 2021, 8:40 [IST]
Other articles published on Feb 22, 2021
English summary
Former Indian players wishes Suryakumar for finally receives national call-up
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X