“விராட் திருமணமே செய்திருக்கக்கூடாது” சோக நாட்களுக்கு குடும்பமே காரணம்.. பாக். வீரர் பரபர பேச்சு!!

சென்னை: விராட் கோலிக்கு திருமணம் நடந்ததால் தான் அவரின் கிரிக்கெட் வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வீரர் புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.

இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேனாக கருதப்படும் விராட் கோலி மீது கடந்த சில வருடங்களாகவே ரசிகர்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

கடந்த 2021ம் ஆண்டு பேட்டிங் மட்டுமல்லாமல், அவரின் கேப்டன்சி பதவிகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்தது.

 கோலி தரும் ஏமாற்றம்

கோலி தரும் ஏமாற்றம்

கேப்டன் பதவிகளில் இருந்து விடுபட்ட பின்னர் மீண்டும் கேப்டன்சி தனது பழைய பேட்டிங் ஃபார்முக்கு திரும்புவார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஏனென்றால் கடந்த 2019ம் ஆண்டுக்கு பிறகு 2 ஆண்டுகளாக ஒரு சதத்தை கூட அடிக்கவில்லை. தென்னாப்பிரிக்க தொடரிலும் ஏமாற்றங்களையே சந்தித்து வருகிறார்.

சோயிப் சர்ச்சை கருத்து

சோயிப் சர்ச்சை கருத்து

இந்நிலையில் விராட் கோலியின் சொதப்பல்களுக்கு அவரின் திருமண வாழ்கையே காரணம் என பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், விராட்டின் கேப்டன்சியில் எனக்கு பெரிய உடன்பாடு இல்லை. ஆனால் பேட்டிங்கில் அவர் தொடர்ந்து 100, 200 என அடித்து சாதிக்க வேண்டியவர். திருமணம் அதனை பாதித்து விட்டது.

என்ன காரணம்

என்ன காரணம்

கோலியின் இடத்தில் நான் இருந்திருந்தால், திருமணம் செய்திருக்க மாட்டேன். கிரிக்கெட்டை மகிழ்ச்சியாக விளையாடி ரன் குவித்திருப்பேன். குடும்பம், குழந்தைகள் மூலமாக வீரர்களுக்கு அதிக அழுத்தங்கள் வரும். பொறுப்புகள் அதிகரிக்கும். இதனால் முன்னணி வீரர்களின் கிரிகெட் பயணம் கூட குறுகிய நாட்களுக்குள் முடிவடைந்துவிடும்.

முக்கிய நாட்கள்

முக்கிய நாட்கள்

இந்த 10 - 12 வருட கிரிக்கெட் மிகவும் முக்கியமானது. மீண்டும் வராது. அந்த நாட்கள் விராட்டிற்கு முடிந்தது என நினைக்கிறேன். அதனால் தான் தற்போது சிரமப்பட்டு வருகிறார். அவர் கிரிக்கெட்டில் முடிந்தவரை சாதித்து விட்டு தான் திருமணம் செய்திருக்க வேண்டும். நான் ஒன்றும் திருமணத்திற்கு எதிரானவன் அல்ல, ஒரு அணியின் தலைவர், தனது கடமையை முடித்த பிறகு திருமணம் செய்துக்கொண்டால் நல்லது. நானும் கேப்டன் பதவியில் இருந்து விலகிய பின்பு தான் திருமணம் செய்துக்கொண்டே. இதுவே உதாரணம் என சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Former Pakistan captain Shoaib Akhtar thinks marriage life pressure is affected Virat Kohli's game
Story first published: Sunday, January 23, 2022, 18:28 [IST]
Other articles published on Jan 23, 2022
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X