For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நிச்சயமா சொல்றேன்.. மற்ற அணிகளுக்கு தோனி தான் சிம்ம சொப்பனம்..! புகழும் அந்த முன்னாள் வீரர்

மும்பை:உலக கோப்பையில் தோனி மற்ற அணிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருப்பார் என்று முன்னாள் வீரர் கிரண் மோரே கூறியிருக்கிறார்.

2004ஆம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் தோனியை தொடர்ந்து ஆட வைக்க தேர்வுக் குழு கூட்டத்தில் தொடர்ந்து பரிந்துரை செய்து வந்துள்ளார் அப்போது தேர்வுக்குழு உறுப்பினர் கிரண் மோரே. ஆனால் ராஞ்சியில் இருந்து அதிக வீரர்கள் இந்திய அணிக்கு சரிவர ஆடவில்லை.

அந்த புள்ளி விவரத்தை கையில் வைத்தபடி இருந்த மற்ற தேர்வுக் குழு உறுப்பினர்களும், தலைவரும் மோரேயின் வலியுறுத்தலை புறக்கணித்து வந்தனர்.

மோடி, ராகுலை மறந்துடுங்க.. தல தோனி தான் அடுத்த பிரதமர்..! ஓட்டு போடுவோம்... நெட்டிசன்ஸ் கலாய் மோடி, ராகுலை மறந்துடுங்க.. தல தோனி தான் அடுத்த பிரதமர்..! ஓட்டு போடுவோம்... நெட்டிசன்ஸ் கலாய்

கங்குலி பரிந்துரை

கங்குலி பரிந்துரை

ஒரு வழியாக அப்போதைய கேப்டன் தாதா சவுரவ் கங்குலி தோனியை பரிந்துரை செய்திருக்கிறார். அதன் பிறகு தான் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் ஆடுவதற்கு தோனி அழைத்துச் செல்லப்பட்டார்.

தோனியின் அர்ப்பணிப்பு

தோனியின் அர்ப்பணிப்பு

தோனி இந்தியாவுக்கு ஆட தொடங்கி.. பின்னர் இந்திய அணிக்கு தோனியின் அர்ப்பணிப்பை அனைவரும் அறிந்தததே. அனைத்துவித ஐசிசி கோப்பைகளையும் என்ற ஒரே கேப்டன் என்ற பெருமையும் தோனிக்கு தான் உண்டு.

 அன்றைய நினைவுகள்

அன்றைய நினைவுகள்

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் தோனியை ஆட்டத்தை கண்டிருக்கிறார் முன்னாள் வீரர் கிரண் மோரே. இதை குறிப்பிட்டுள்ள அவர், 2004ஆம் ஆண்டு தோனியை முதன் முதலாக தேர்வு செய்த போது நடந்த நிகழ்வுகள் நினைவில் வந்து போனதாக கூறியிருக்கிறார்.

தோனி சிம்ம சொப்பனம்

தோனி சிம்ம சொப்பனம்

அவர் மேலும் கூறியிருப்பதாவது: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பேட்டிங் அபாரம். தோனியும் தற்போதைய திறமை இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பையில் எதிரணிகளுக்கு சிம்ம சொப்பனமாக அமையும் என்று தெரிவித்தார்.

Story first published: Tuesday, April 23, 2019, 0:29 [IST]
Other articles published on Apr 23, 2019
English summary
Former player kiran more hails dhoni after the match against royal challengers Bangalore.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X