For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மும்பைக்கு போங்க கோலி... விமான டிக்கெட் போட்டு கேவலப்படுத்திய முன்னாள் கேப்டன்..!!

Recommended Video

WORLD CUP 2019 : IND VS NZ : Kohli Press Conference | செய்தியாளர் சந்திப்பிலேயே உடைந்த கோலி- வீடியோ

மான்செஸ்டர்: இந்தியா தோற்ற நிலையில் கோலியை மும்பை பிளைட் டிக்கெட்டுடன் இருக்கும் போட்டோவை போட்டு கிண்டல் செய்திருக்கிறார் முன்னாள் வீரர் மைக்கேல் வாகன்.

உலக கோப்பை அரையிறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது. அந்த அணியில் ராஸ் டைலர் 74 (80) மற்றும் வில்லியம்சன் 67 (95) ரன்கள் எடுத்தனர். இந்திய அணியில் புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா ஒரு ரன்னில் அவுட் ஆனார். அவரைத் தொடர்ந்து கேப்டன் கோலியும் ஒரு ரன்னில் அவுட் ஆக இந்திய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

தோனி முன்பே களமிறங்கி இருந்தால் என்ன செய்திருப்பார்? கேப்டன் கோலிக்கு பாடம் எடுத்த சச்சின், கங்குலி! தோனி முன்பே களமிறங்கி இருந்தால் என்ன செய்திருப்பார்? கேப்டன் கோலிக்கு பாடம் எடுத்த சச்சின், கங்குலி!

கடும் அதிர்ச்சி

கடும் அதிர்ச்சி

பின்னர் ராகுலும் ஒரு ரன்னில் விக்கெட்டை இழந்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 6 (25) ரன்களில் அவுட் ஆனார். சற்று நேரம் நிலைத்து ஆடிய ரிஷப் பன்ட், ஹர்திக் பாண்ட்யா தலா 32 ரன்கள் எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.

சரிந்த அணி

சரிந்த அணி

அதனால் இந்திய அணி 92 ரன்களில் 6 விக்கெட்டுகளை இழந்து நிலைகுலைந்தது. அணியின் சரிவை தோனியும், ஜடேஜாவும் மெதுவாக தூக்கி நிறுத்தினர். அவர்களின் ஆட்டத்தால் நியூசிலாந்து கலக்கம் அடைந்தது. அசத்தலாக விளையாடிய ஜடேஜா சிக்சருடன் அரைசதம் கடந்தார்.

அவுட்டான ஜடேஜா

அவுட்டான ஜடேஜா

ஜடேஜாவின் அதிரடியில் இந்திய அணி 46 ஓவர்களில் 198 ரன்களை எட்டியது. 47 ஓவர்கள் முடிவில் 18 பந்துகளுக்கு 37 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா இருந்தது. ஆனால், 77 (59) ரன்களில் ஜடேஜா ஆட்டமிழந்தார். 3 விக்கெட்டுகள் கையிலிருக்க 13 பந்துகளில் 32 ரன்கள் எடுக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.

ரசிகர்கள் கண்ணீர்

ரசிகர்கள் கண்ணீர்

தோனி 50 (72) ரன்களில் ரன் அவுட் ஆனார். ரசிகர்கள் கண்ணீர்விட்டு கதறினர். அதைத்தொடர்ந்து புவனேஷ் குமார் விக்கெட்டை இழந்தார். 49.3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 221 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தேர்வானாது.

ரசிகர்கள் ட்ரோல்

ரசிகர்கள் ட்ரோல்

மழையின் ஆட்டம், பேட்டிங் வரிசையை மாற்றியது, தோனியின் சர்ச்சை ரன் அவுட் என பல விஷயங்கள் தோல்விக்கு பின்னர் பூதாகரமாயின. முன்னாள் கேப்டன்கள், ரசிகர்கள் என பலரும் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். போட்டியின் போது வீரர்களின் தவறுகள் இணையத்தில் ட்ரோல் ஆகி வருகின்றன.

முன்னாள் கேப்டன் கேலி

முன்னாள் கேப்டன் கேலி

போட்டியை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் பலர் இந்திய அணிக்கும் விராட் கோஹ்லிக்கும் ஆறுதல் தெரிவிக்கும் வகையில் பேசி வருகின்றனர். ஆனால் சர்ச்சை கருத்துகளுக்கு பெயர் போன முன்னாள் வீரர் மைக்கேல் வாகன் மட்டும், கோலியை கிண்டலடிக்கும் வகையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

கையில் டிக்கெட்

அந்த பதிவில் ஒரு போட்டோ காட்டப்பட்டிருக்கிறது. நீல வண்ண ஆடையுடன் மன்னர் வேஷத்தில் இருக்கும் கோலி கையில் பெரிய டிக்கெட்டை வைத்து இருக்கிறார். அது விமான டிக்கெட். இன்றைய தேதியிட்ட (11.07.2019) அந்த டிக்கெட்டில் கோலியின் பெயர் உள்ளது.

கோபத்தில் ரசிகர்கள்

கோபத்தில் ரசிகர்கள்

பயணம்... லண்டன் விமானநிலையத்தில் இருந்து மும்பைக்கு என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. மேலும் கையில் கிரிக்கெட் பந்துடன் உட்கார்ந்திருக்கும் அவரது பின்புறம் எந்த ஆண்டில் இந்திய உலக கோப்பை சாம்பியன் ஆனது(1983,2011) ஆகியவை குறிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே செம கோபத்தில் இருக்கும் இந்திய அணி ரசிகர்கள், இதனை கண்டு பொங்கி இருக்கின்றனர்.

Story first published: Thursday, July 11, 2019, 13:57 [IST]
Other articles published on Jul 11, 2019
English summary
Former player Michael Vaughan criticizes virat kohli after the lose against new Zealand.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X