For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

நொண்டி வாத்துன்னு சொன்ன கவாஸ்கர்..! மரியாதையா சொல்றேன்.. டுவிட்டரில் பொங்கிய வர்ணனையாளர்

Recommended Video

Gavaskar Vs Manjrekar : விமர்சனம் செய்த கவாஸ்கர்..பதில் கூறிய மஞ்சரேக்கர்- வீடியோ

மும்பை: இந்திய அணி தேர்வாளர்கள், கோலி கேப்டனாக தொடர வேண்டும் என்று நினைத்தது சரியே என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் பதில் தந்துள்ளார்.

உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதி போட்டியுடன் வெளியேறியதை அடுத்து விராட் கோலி மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. ஒரு நாள் போட்டிகளுக்கும், டெஸ்ட் போட்டிகளுக்கும் தனித்தனி கேப்டனை நியமிக்க வேண்டுமென கருத்துகள் வந்தன.

உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா இந்திய அணியை வழிநடத்த வேண்டுமென முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்தது இருந்தனர். யாரும் எதிர்பார்க்காத தருணத்தில் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி கேப்டனாக நியமிக்கப் பட்டார்.

கருத்து சொன்ன கவாஸ்கர்

கருத்து சொன்ன கவாஸ்கர்

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார். அதில், கோலியை மீண்டும் கேப்டனாக நியமித்தது மூலம் இந்திய கிரிக்கெட் தேர்வு அணியினர் நொண்டி வாத்துக்கள் போல் செயல்படுகின்றனர்.

கோலி எதற்கு கேப்டன்?

கோலி எதற்கு கேப்டன்?

உலகக் கோப்பையில் சரியாக விளையாடாத கேதர் ஜாதவ், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு அணியில் இல்லை. கோலியும் கேப்டனாக பெரிய அளவில் ஜொலிக்காத போது, ஏன் கேப்டனாக வைத்துள்ளனர்? கோலியை எப்படி கேப்டனாகத் தேர்வு செய்தார்கள் என்று போட்டு தாக்கினார்.

மஞ்சரேக்கர் பதில்

மஞ்சரேக்கர் பதில்

அதற்கு முன்னாள் வீரரும், சர்ச்சைக்குரிய வகையில் பேசும் வர்ணனையாளருமான சஞ்சய் மஞ்சரேகர் பதில் அளிக்கிறேன். இது குறித்து அவர் டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் கூறி இருப்பதாவது:

அது சரியே

கோலியின் கேப்டன்ஷிப், அணி தேர்வு குறித்து கவாஸ்கரின் கருத்துக்கு இந்த இடத்தில் மரியாதையுடன் உடன் பட விரும்பவில்லை. இந்திய அணி தேர்வாளர்கள் மற்றும் கோலி தொடர நினைத்தது சரியே.

கோலி மீது தவறு இல்லை

கோலி மீது தவறு இல்லை

இந்திய அணி உலக கோப்பையில் சராசரிக்கும் கீழே எல்லாம் விளையாட வில்லை. 9 போட்டிகளில் 7 வெற்றி பெற்று இரண்டில் மட்டுமே தோற்றது. அதுவும் கடைசி போட்டி மிக சிறிய வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. கோலி மீது எந்த ஒரு தவறும் இல்லை என்றார்.

Story first published: Tuesday, July 30, 2019, 13:45 [IST]
Other articles published on Jul 30, 2019
English summary
Former player sanjay manjrekar replies former captain sunil gavaskar about kohli captaincy.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X