For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சவுத்தாம்டன் பிட்ச்-ல் திடீர் மாற்றம்..ஷேன் வார்னே கிளப்பிய புதிய பூகம்பம்.. நியூஸி,வீரர்கள் கலக்கம்

சவுத்தாம்டன்: இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டியில் திடீர் பூகம்பத்தை கிளப்பியுள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான ஆட்டம் இன்று தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்து விளையாடி வருகிறது.

பிட்ச் நிலைமை

பிட்ச் நிலைமை

சவுத்தாம்டன் பிட்ச் வழக்கமாக ஸ்பின்னர்களுக்கு இந்த களம் உதவாது என்றும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கே சாதகமாக இருக்கும் எனக்கூறப்பட்டது. அதுவும் மழைப்பொழிவுக்கு பிறகு வேகப்பந்துவீச்சாளார்கள் தான் இந்த பிட்ச்-ல் கலக்க போகிறார்கள் எனக்கூறப்பட்டது.

அதிருப்தி

அதிருப்தி

இதன் காரணமாக நியூசிலாந்து அணி தனது ப்ளேயிங் 11ல் ஒரு ஸ்பின்னரை கூட வைத்துக்கொள்ளாமல், 5 வேகப்பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது. ஆனால் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளார்கள், 2 ஸ்பின்னர்களுடன் களமிறங்கியது. இந்திய அணியின் இந்த முடிவுக்கு கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர்.

 பிட்ச்-ல் ஏற்பட்ட மாற்றம்

பிட்ச்-ல் ஏற்பட்ட மாற்றம்

இந்நிலையில் தற்போது பிட்ச்-ல் பந்து சற்று ஸ்பின் ஆவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா- சுப்மன் கில் ஜோடி சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். தொடக்கத்தில் பிட்ச்-ல் ஸ்விங் இருந்த போதும் உணவு இடைவெளிக்கு பிறகு பிட்ச்-ல் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்க சற்று சிரமப்பட்டு வருவதாக தெரிகிறது.

ஷேன் வார்னே கருத்து

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள முன்னாள் வீரர் ஷேன் வார்னே, நியூசிலாந்து அணி ஒரு ஸ்பின்னர் கூட இல்லாமல் களமிறங்கியிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. சவுத்தாம்டன் களத்தில் மிகப்பெரிய அளவில் பந்து ஸ்பின் ஆக போகிறது. அதற்கான அறிகுறிகள் தற்போதே தெரிய தொடங்கியுள்ளது. மழை மட்டும் குறுக்கிடாமல் இருந்தால் தற்போது முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி 275 ரன்கள் முதல் 300 ரன்கள் அடித்தால் போதும். போட்டி அவர்களின் பக்கம் சென்றுவிடும் எனக்கூறியுள்ளார்.

பார்ட் டைம் ஸ்பின்னர்ஸ்

பார்ட் டைம் ஸ்பின்னர்ஸ்

ஒருவேளை ஷேன் வார்னே கூறியது போன்று ஸ்பின்னர்களுக்கு சாதகமாக பிட்ச் மாறினால், அஸ்வின் - ஜடேஜா சுலபமாக நியூசிலாந்து அணியை சுருட்ட வாய்ப்புள்ளது. நியூசிலாந்து அணியை பொறுத்தவரை கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் லாந்தம் பார்ட் டைம் ஸ்பின்னர்களாக செயல்பட வாய்ப்புள்ளது.

Story first published: Saturday, June 19, 2021, 21:19 [IST]
Other articles published on Jun 19, 2021
English summary
Former Player Shane Warne gets disappointed with New Zealand Team for playing WTC Final without a spinner
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X