For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

எனக்கு ஏழு மொழிகளில் கெட்ட வார்த்தைகள் தெரியும்! அதிர வைத்த பிரபல கிரிக்கெட் அம்பயர்!

பெங்களூரு : சர்வதேச கிரிக்கெட்டில் பிரபலமான அம்பயராக விளங்கிய சைமன் டாஃபல் தனக்கு ஏழு மொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகள் தெரியும் எனக் கூறி அதிர்ச்சியும், ஆச்சரியமும் பட வைத்துள்ளார்.

இந்தியாவில் உள்ள கல்லூரி ஒன்றில் சிறப்புரை ஆற்ற வந்த இடத்தில் தான் இதைக் கூறி இருக்கிறார் சைமன் டாஃபல்.

மாணவர்கள் மத்தியில் கெட்ட வார்த்தை தெரியும் என்பது பற்றி சைமன் டாஃபல் ஏன் கூறினார் என்பதும் சுவாரஸ்யமான சம்பவம் தான்.

டெல்லியில் நாளை 5வது ஒருநாள் போட்டி.. ஆஸி.யை வீழ்த்த இந்தியா வியூகம்டெல்லியில் நாளை 5வது ஒருநாள் போட்டி.. ஆஸி.யை வீழ்த்த இந்தியா வியூகம்

முனாப் பட்டேல் திட்டினார்

முனாப் பட்டேல் திட்டினார்

கடந்த 2006ஆம் ஆண்டு இந்தியா - இங்கிலாந்து இடையே மும்பையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முனாப் பட்டேல், இங்கிலாந்து வீரர் ஓவைஸ் ஷாவை ஹிந்தியில் உள்ள கெட்ட வார்த்தையில் திட்டினார்.

ஹிந்தி தெரியாது

ஹிந்தி தெரியாது

அருகே அம்பயர் சைமன் டாஃபல் நின்று இருந்தார். அவருக்கு ஹிந்தி தெரியாது என நினைத்தே முனாப் படேல் தைரியமாக ஹிந்தியில் கெட்ட வார்த்தையை பயன்படுத்தினார். ஆனால், சைமன் டாஃபல் அதை அப்போது கண்டுபிடித்தார்.

அது என்ன வார்த்தை?

அது என்ன வார்த்தை?

அது பற்றி மாணவர்கள் இடையே பேசிய போது குறிப்பிட்ட சைமன் டாஃபல், அந்த வீடியோவை போட்டுக் காட்டி, அது என்ன கெட்ட வார்த்தை என்பதையும் ஹிந்தியில் குறிப்பிட்டு கூறினார்.

கெட்ட வார்த்தைகள்

கெட்ட வார்த்தைகள்

பின்னர், மாணவர்களிடம், "கிரிக்கெட் அம்பயராக நான் உள்ளூர் மொழிகளில் உள்ள நல்ல வார்த்தைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என தெரிந்து கொண்டேன். ஆனால், இப்போது எனக்கு ஏழு மொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகள் தெரியும். அது பலமுறை எனக்கு களத்தில் நடந்த சம்பவங்களின் போது உதவியுள்ளது" என்றார்

அடிப்படை

அடிப்படை

தான் எப்படி தன் வேலைக்காக பல மொழிகளில் உள்ள கெட்ட வார்த்தைகளையும் கற்றுக் கொள்ள நேர்ந்ததோ, அதே போல மாணவர்களும் தங்கள் எதிர்காலத்துக்கு தேவையான அடிப்படைகளை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கே இதை உதாரணமாக கூறினார் சைமன் டாஃபல்.

சைமன் டாஃபல் சாதனை

சைமன் டாஃபல் சாதனை

சைமன் டாஃபல் 1999 முதல் 2012 வரை அம்பயராக இருந்து ஓய்வு பெற்றார். தான் பணியாற்றிய காலத்தில் தொடர்ந்து ஐந்து வருடங்களில் ஐசிசி சிறந்த அம்பயர் விருதை வென்றார். 74 டெஸ்ட் போட்டிகள், 104 ஒருநாள் போட்டிகள் மற்றும் 34 டி20 போட்டிகளுக்கு அம்பயராக பணியாற்றி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, March 12, 2019, 15:47 [IST]
Other articles published on Mar 12, 2019
English summary
Former Umpire Simon Taufel says he knows bad words in 7 different languages
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X