For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

WTC Final 2021: கிங் கோலிக்கு.. காத்திருக்கும் 'நான்கு' குடைச்சல்-விட்டா வாரி சுருட்டிட்டு போயிடும்

மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், இந்திய கேப்டன் கோலிக்கு காத்திருக்கும் நான்கு முக்கிய சவால்கள் குறித்து பார்க்கலாம்.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் ஜூன் 18 முதல் 22 வரை நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், நியூசிலாந்து அணியை இந்தியா எதிர்கொள்கிறது. அதைத் தொடர்ந்து அங்கேயே இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.

மகனுக்கு கொரோனா வரக்கூடாது.. வாஷிங்டன் சுந்தருக்காக தந்தை செய்த காரியம்..இங்கிலாந்து டூர் மிஸ் ஆகாதுமகனுக்கு கொரோனா வரக்கூடாது.. வாஷிங்டன் சுந்தருக்காக தந்தை செய்த காரியம்..இங்கிலாந்து டூர் மிஸ் ஆகாது

இதற்காக, அடுத்த மாதம் 2ம் தேதி இந்திய அணி இங்கிலாந்துக்கு புறப்படுகிறது. முதன் முதலாக நடத்தப்படும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில், இறுதிப் போட்டி வரை இந்திய அணி முன்னேறி இருப்பதால், ரசிகர்கள் பேராவலோடு காத்திருக்கின்றனர். ஆனால், இந்த களம் அவ்வளவு இலகுவாக இருக்க வாய்ப்பில்லை.

வீரர்கள் தயார்

வீரர்கள் தயார்

இதில், இந்திய கேப்டன் விராட் கோலி நான்கு சிக்கல்களை.. அதாவது காதுக்குள் சென்று குடைச்சல் கொடுக்கும் எறும்பைப் போல, இந்திய அணிக்கு அணிக்கு பல்வேறு டேமேஜ்களை ஏற்படுத்த நான்கு நியூஸி., வீரர்கள் தயாராக உள்ளனர். நடப்பது என்னவோ ஒரே டெஸ்ட் தான். ஆனால், இரு இன்னிங்ஸிலும் இவர்கள் ஏற்படுத்தப் போகும் சேதாரம் மற்ற வீரர்களை விட சற்று காட்டமாகவே இருக்கும்.

நம்பர் 1. குடைச்சல்

நம்பர் 1. குடைச்சல்

கிரிக்கெட் பார்க்கும் ஐந்தாம் வகுப்பு பிள்ளை கூட சொல்லிவிடும் இவர் தான் கோலியின் நம்பர்.1 தலைவலி என்று. நியூசிலாந்து மண்ணுக்கு வெளியே இதுவரை 36 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கும் வில்லியம்சன் அடித்த ரன்கள் 2,680. ஆவரேஜ் 42.53. பெஸ்ட் ஸ்கோர் 166. 9 சதம், 19 அரைசதம். குறிப்பாக, இறுதிப் போட்டி நடைபெறும் இங்கிலாந்தில் நான்கு போட்டிகளில் விளையாடி 247 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சம் 132. ஆவரேஜ் 30.87. ஸோ, நியூட்ரல் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் வில்லியம்சன் படாதபாடு படுத்துவார் என்று எதிர்பார்க்கலாம்.

நம்பர் 2 குடைச்சல்

நம்பர் 2 குடைச்சல்

தி மோஸ்ட் சீனியர் வீரர். 90'ஸ் கிட்ஸ் வீரர். நியூசிலாந்தை விட்டு வெளியே விளையாடுவது என்றால், மனிதருக்கு அல்வா சாப்பிடுவது போன்று. இதுவரை வெளிநாடுகளில் 47 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3263 ரன்கள் குவித்துள்ளார். ஆவரேஜ் 40.78. பெஸ்ட் ஸ்கோர் 290. டெஸ்ட் போட்டிகளில் இவரது அதிகபட்ச ஸ்கோரே இதுதான். குறிப்பாக, இங்கிலாந்தில் 7 போட்டிகளில் ஆடியுள்ள டெய்லர், 523 ரன்கள் விளாசியுள்ளார். ஆவரேஜ் 40.23. பெஸ்ட் - 154 (நாட் அவுட்). இவரை அவுட் செய்வது வில்லியம்சனை விட சற்று சுலபம் என்றாலும், எப்போது நின்று அடிப்பார் என்று யாராலும் கணிக்க முடியாது.

ஸ்விங் அண்ட் பேஸ்

ஸ்விங் அண்ட் பேஸ்

இவரது Pace-ஐ சமாளிப்பது இந்திய பேட்ஸ்மேன்களுக்கு பெரும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம். குறிப்பாக, ஓப்பனர்ஸ்களுக்கு. இவரது ஸ்விங் + பேஸ் அவ்வளவு எளிதில் கெஸ் செய்ய முடியாது. இங்கிலாந்து பிட்சுகள், ஏறக்குறைய நியூசிலாந்து பிட்சுகளை போன்று இருக்கும் என்பதால், பாரபட்சமின்றி விக்கெட்டுகள் சரியும். இங்கிலாந்தில், 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 21 விக்கெட்டுகளை அறுவடை செய்திருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். பெஸ்ட் 5/57

வியூகங்கள் ரெடி

வியூகங்கள் ரெடி

அணியின் மற்றொரு சீனியர் ஃபாஸ்ட் பவுலர். ஓப்பனர்ஸ், மிடில் ஆர்டர், லோ ஆர்டர் என்று பாரபட்சமின்றி விக்கெட்டுகளை அள்ளும் பவுலர். இவருக்கு ஏற்ற பிட்ச் அமைந்துவிட்டால், அன்றைய நாள் இவருடையது தான். எத்தனை கோலி வந்தாலும் சமாளிக்க முடியாது. இங்கிலாந்தில், 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 20 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். பெஸ்ட் 6/50. பவுன்ஸ், ஸ்விங் இவரது பலம். இன் ஸ்விங் மூலம் இந்திய வீரர்களை திணறடிக்க இந்நேரம் இவர் மனதில் பல வியூகங்கள் வகுக்கப்பட்டிருக்கலாம்.

Story first published: Tuesday, May 18, 2021, 18:43 [IST]
Other articles published on May 18, 2021
English summary
huge threats for captain kohli WTC Final 2021 - விராட் கோலி
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X