ஹலோ நான் தோனி.. ஒரு 500 ரூபாய் கிடைக்குமா.. ஆன்லைனில் நடைபெறும் புது மோசடி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் பெயரை வைத்து காண்போரை சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒரு மோசடி நடைபெறுகிறது.

தோனியின் பெயரை பயன்படுத்தி என்ற நினைத்தவுடன் பெரிய தொகை எல்லாம் இல்லை, வெறும் ஆயிரம் ரூபாய் தான்.

சமூக வலைத்தளத்தில் வட மாநிலத்தை சேர்ந்த இளைஞர்கள் அவ்வப்போது, தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு உங்கள் கார்ட் மேல இருக்கிற நம்பர் சொல்லுங்க என்று கேட்பார்கள் அல்லவா.

செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்செஸ் ஒலிம்பியாட் வெற்றியா ? தோல்வியா? - ஒரே கல்லில் 3 மாங்காய்.. தமிழக அரசின் செம பிளான்

முகநூல் மோசடி

முகநூல் மோசடி

இப்போது, அதே மாதிரி முகநூலில் நமது நண்பர்கள் பெயரில் ஒரு போலி கணக்கை உருவாக்கி, நமது நண்பர்கள் புகைப்படம் போலவே அனைத்தையும் பதிவிட்டு, அவர்கள் போலவே, எனக்கு பணம் வேண்டும். கொஞ்சம் தாருங்கள், நாளைக்கு உங்களை சந்திக்கும் போது திருப்பி தருகிறேன் என்று மோசடி அவ்வப்போது நடைபெறும்.

இயக்குநர் மோகன் ஜி

இயக்குநர் மோகன் ஜி

அவ்வளவு ஏன், நமது திரைப்பட இயக்குநர் மோகன் ஜி பணம் கேட்பது போல அண்மையில் ஒரு மோசடி நடைபெற்றது. அது நான் இல்லை, யாரும் ஏமாற வேண்டாம் என்று மோகன் ஜியும் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், தற்போது, அந்த மோசடி கும்பல், காண்போரை சிரிக்க வைக்கும் அளவுக்கு ஒரு மோசடியை அரங்கேற்க முயற்சித்துள்ளது.

தோனி பெயரில் மோசடி

தோனி பெயரில் மோசடி

அதாவது தோனி பெயரில் ஒரு முகநூல் கணக்கை தொடங்கி, நான் தான் தோனி பேசுகிறேன். எனக்கு அவசரமாக ஒரு 500 ரூபாய் வேண்டும். எனக்கு இந்த வங்கி கணக்கில் பணம் அணுப்புகிறீர்களா.. நான் உண்மையான தோனி தான் என நம்புவதற்கு என்னுடைய புகைப்படத்தை அனுப்புகிறேன். பாருங்கள், என்று இணையத்தளத்திலிருந்து தோனியின் புகைப்படத்தை எடுத்து அந்த கும்பல் அனுப்புகிறது.

சிரிக்க வைக்கும் மோசடி

சிரிக்க வைக்கும் மோசடி

இதை பார்த்தவுடன் நம்மவர்கள் சிரித்து விடுகிறார்கள். இது எல்லாம் ஒரு மோசடி என்று செய்றீங்களே. எல்கேஜி படிக்கும் குழந்தை கூட இதுல்லாம் நம்பாது என்று மோசடி கம்பலை மொக்கை செய்து அனுப்புகிறார்கள் நெட்டிசன்கள். ஆசியாவிலேயே மிகப் பெரிய பணக்கார விளையாட்டு வீரரான தோனி, நமக்கு ஏன் மெசஜ் செய்து ஆயிரம் ரூபாய் கேட்கப்போகிறார். எனினும் இது காமெடியாக நினைத்து ஒதுக்கிவிடாமல், போலீசாரும் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

For Quick Alerts
Subscribe Now
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Fraudster using Dhoni name to get amount in social network ஹலோ நான் தோனி.. ஒரு 500 ரூபாய் கிடைக்குமா.. ஆன்லைனில் நடைபெறும் புது மோசடி
Story first published: Wednesday, August 10, 2022, 17:43 [IST]
Other articles published on Aug 10, 2022

Latest Videos

  + More
  POLLS
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Yes No
  Settings X