For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

230 இந்தியா, 121 வெளிநாடு, ஆக மொத்தம் 351 வீரர்கள்.. பெங்களூரில் பிப். 6ல் ஏலம்!

பெங்களூரூ: ஐபிஎல் 2016 வீரர்கள் ஏலத்தில் மொத்தம் 351 வீரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இதில் 230 பேர் இந்தியர்கள். மற்றவர்கள் வெளிநாட்டு வீரர்கள் ஆவர்.

பிப்ரவரி 6ம் தேதி பெங்களூரில் இந்த ஏலம் நடைபெறவுள்ளது. இந்த வீரர்களில் ஆல்ரவுண்டர்களே அதிகம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலத்திற்கு வரும் 351 வீரர்களின் பட்டியலையும் பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இதில் 8 முக்கிய வீரர்கள், 8 அணிகளுக்கும் முதல் வீரர்களாக ஏலத்தில் விடப்படுவர். இவர்களில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் யுவராஜ் சிங்கும், இஷாந்த் சர்மாவும். மற்ற 6 பேரும் வெளிநாட்டு வீரர்கள்.

அதிகபட்ச அடிப்படை தொகை ரூ. 2 கோடி

அதிகபட்ச அடிப்படை தொகை ரூ. 2 கோடி

351 வீரர்களில் அதிகபட்ச அடிப்படைத் தொகையாக ரூ. 2 கோடியும், குறைந்தபட்ச தொகையாக ரூ. 10 லட்சமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

முத்திரை வீரர்கள்

முத்திரை வீரர்கள்

இதில் முத்திரை வீரர்களாக இடம் பெறுவோர் 8 பேர். இவர்கள்தான் முதலில் ஏலம் விடப்படுவர். ஒவ்வொரு அணியும் ஒருவரை ஏலம் எடுக்கலாம்.

4 பேருக்கு தலா ரூ. 2 கோடி

4 பேருக்கு தலா ரூ. 2 கோடி

இந்த எட்டுப் பேரில் இஷாந்த் சர்மா, ஷான் வாட்சன், கெவின் பீட்டர்சன், யுவராஜ் சிங் ஆகியோருக்கு தலா 2 கோடி அடிப்படைத் தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஸ்டெயினுக்கு ரூ. 1.5 கோடி, ஆரோன் பின்ச்சுக்கு ரூ. 1 கோடி, மார்ட்டின் குப்தில், வேயன்ஸ்மித் ஆகியோருக்கு தலா ரூ. 50 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பேட்ஸ்மேன்

பேட்ஸ்மேன்

இந்தப் பட்டியலில் பேட்ஸ்மேன்கள் அதிகம் இல்லை. அதாவது 64 பேர்தான் இடம் பெற்றுள்ளனர். மைக் ஹஸ்ஸி, மஹளா ஜெயவர்த்தானா, டேவிட் ஹஸ்ஸி, உஸ்மான் காஜா, ஹசிம் ஆம்லா, டேரன் பிராவோ, புஜாரா, பத்ரிநாத் ஆகியோர் முக்கியமானவர்கள்.

110 பவுலர்கள்

110 பவுலர்கள்

பந்து வீச்சாளர்கள் வகையில் 110 பேர் இடம் பெற்றுள்ளனர். ஆசிஷ் நெஹ்ரா, கனே ரிச்சர்ட்சன், மோஹித் சர்மா, டிம் செளதீ, ஷான் டெய்ட், ஹேஸ்டிங்ஸ், பிரவீன் குமார், முனாப் படேல், ஸ்காட் போலன்ட், காமரூன் பாய்ஸ், பரீந்தர் ஸ்ரன், வீராசாமி பெருமாள், ஹர்டிக் படேல் முக்கியமானவர்கள்.

37 விக்கெட் கீப்பர்கள்

37 விக்கெட் கீப்பர்கள்

மொத்தம் 37 விக்கெட் கீப்பர்களும் இப்பட்டியலில் இடம் பெறுகின்றனர். சஞ்சு சாம்சன், தினேஷ் கார்த்திக், பிராட் ஹாடின் ஆகியோர் முக்கியமானவர்கள்.

ஆல் ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டர்கள்

ஆல் ரவுண்டர்கள்தான் வழக்கம் போல அதிகம். அதாவது 132 பேர் இடம் பெற்றுள்ளனர். ஸ்டூவர்ட் பின்னி, திலகரத்னே தில்ஷன், இர்பான் பதான், ரவி போபரா, மனோஜ் திவாரி, பிளான்டர், டேரன் சமி, நாதன் மெக்கல்லம், ஜேசன் ஹோல்டர், சீன் அப்பாட் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள்.

Story first published: Sunday, January 31, 2016, 17:22 [IST]
Other articles published on Jan 31, 2016
English summary
It is Players Auction time again in the Indian Premier League. For the year 2016, as many 351 cricketers (230 Indians and 121 overseas) have been finalised to go under the hammer on February 6 in Bengaluru.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X