For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

360 டிகிரி பிளேயர்.... டிவில்லியர்ஸின் மறக்க முடியாத அதிரடிகள்!

கிரிக்கெட்டில் இருந்து டிவில்லியர்ஸ் ஓய்வு பெற்றுள்ளார். அவருடைய மறக்க முடியாத சில ஆட்டங்கள்.

Recommended Video

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுகிறார் ஏபி டி வில்லியர்ஸ்- வீடியோ

சென்னை: கிரிக்கெட் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்டுள்ள பல ஜாம்பவான்களில் தென்னாப்பிரிக்காவின் ஆப்ரகாம் பெஞ்சமின் டி வில்லியர்சும் ஒருவர்.

360 டிகிரி பிளேயர் என்று அவரைக் கூறுவார்கள். அதாவது நிற்கும் இடத்தில் இருந்து அனைத்து திசைகளிலும் பந்தை அடிக்கக் கூடிய திறன் பெற்றவர். சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் முடிவை அவர் இன்று அறிவித்துள்ளார். இருந்தாலும் அவர் கிரிக்கெட்டில் செய்த சாதனைகள் எப்போதும் பேசப்படும்.

ஒருதினப் போட்டிகளில் அதிகவேகமாக, 50, 100, 150 ரன்கள் குவித்த அவருடைய சாதனைகளே, அவருடைய திறமையை பேசும். பல ஆட்டங்களில் அவர் அதிரடி ஆட்டத்தால் மிரள வைத்துள்ளார். அதில் மிகவும் சூப்பரான ஆட்டங்களை பார்போம்.

2008ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் நடந்த டெஸ்ட் போட்டியில் டிவில்லியர்ஸ் 106 ரன்கள் எடுத்தது, அவருடைய டெஸ்ட் போட்டிகளில் சிறந்த சதமாக உள்ளது. 414 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், டிவில்லியர்ஸ் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார்.

31 பந்துகளில் சதம்

31 பந்துகளில் சதம்

2015ல் ஜோகன்னஸ்பர்கில் வெஸ்ட் இன்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில், அவர் எடுத்த 149 ரன்களை எந்தக் காலத்திலும் மறக்க முடியாது. அந்த ஆட்டத்தில் 39வது ஓவரில்தான் அவர் களமிறங்கினார். 31 பந்துகளில் சதமடித்து மிரட்டினார். 59 நிமிடங்களில், 44 பந்துகளில், 16 சிக்சர்களுடன் அவர் 149 ரன்கள் எடுத்தார்.

பொறுப்பான ஆட்டம்

பொறுப்பான ஆட்டம்

2008ல் அடிடெய்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் கடைசி நாளில் 430 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், தென்னாப்பிரிக்கா 4 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது நான்கு மணி நேரம் மைதானத்தில் இருந்து 33 ரன்கள் எடுத்தார் டிவில்லியர்ஸ். இந்த ஆட்டத்தில் டுபிளாசி சதம் அடிக்க, ஆட்டம் டிராவில் முடிந்தது. ஆனால், டிவில்லியர்ஸின் பொறுப்பான, நிதான ஆட்டம் இன்றும் பேசப்படுகிறது.

இந்தியாவுக்கு எதிராக

இந்தியாவுக்கு எதிராக

டிவில்லியர்ஸ் கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத மற்றொரு ஆட்டம் 2008ல் ஆமதாபாத்தில் இந்தியாவுக்கு எதிராக அமைந்தது. இந்த ஆட்டத்தில் டிவில்லியர்ஸ் 217 ரன்கள் அடித்து தென்னாப்பிரிக்காவுக்கு வெற்றியை தேடித் தந்தார்.

அதிரடி மன்னன்

அதிரடி மன்னன்

2014ல் சிட்டகாங்கிஸ் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா 16 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 128 ரன்களுடன் இருந்தது. அதில் டிவில்லியர்ஸ் 28 பந்துகளில் 69 ரன்கள் குவிக்க, தென்னாப்பிரிக்கா 196 ரன்கள் எடுத்தது. 3 ரன்களில் வென்றது.

டிவில்லியர்ஸ் கிரிக்கெட் வரலாற்றில் ஒவ்வொரு ஆட்டமும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும், இந்த ஆட்டங்களில் அவர் காட்டிய அதிரடி, பொறுப்பான ஆட்டங்களே, அவரை சிறந்த வீரராக போற்றுவதற்கு காரணங்களாக அமைந்தன.

Story first published: Wednesday, May 23, 2018, 19:24 [IST]
Other articles published on May 23, 2018
English summary
AB De villers retired from international matches. some of his best moments are here.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X