தோனி மீது அப்படி என்ன வன்மம் கம்பீருக்கு..?? இப்போ என்ன சொன்னாரு தெரியுமா?

ஐ.பி.எல். 2022 ஆம் ஆண்டு சீசனை முன்னிட்டு மெகா ஏலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறுகிறது.

Dhoni, Kohli, Rohit, Pant retained for IPL 2022 | OneIndia Tamil

இதற்காக அணிகள் அதிகபட்சமாக 4 வீரர்களை மட்டுமே தக்க வைத்து கொள்ள முடியும். இதில் அதிகபட்சம் 2 வெளிநாட்டு வீரர்கள் அல்லது 3 இந்திய வீரர்களை ஒவ்வொரு அணியும் தக்க வைத்து கொள்ள முடியும்.

எந்த அணி யாரை தக்க வைத்து கொண்டது என்பது குறித்து இன்று இரவு 9 மணிக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்படும்.

ஐபிஎல் மெகா ஏலம்.. இன்று வெளியாகிறது வீரர்கள் தக்கவைப்பு விவரங்கள்.. எங்கு எப்படி.. காணலாம்! ஐபிஎல் மெகா ஏலம்.. இன்று வெளியாகிறது வீரர்கள் தக்கவைப்பு விவரங்கள்.. எங்கு எப்படி.. காணலாம்!

சம்பளம்

சம்பளம்

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக வீரர்களின் ஏலத்தில் 90 கோடி ரூபாய் வரை செலவு செய்ய முடியும். ஒரு அணி 4 விரர்களை தக்க வைத்து கொண்டால், அவர்களின் 90 கோடி ரூபாய் கணக்கிலிருந்து 42 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும். அதுவே 3 வீரர்கள் என்றால் ரூ. 33 கோடி, 2 வீரர்கள் என்றால் ரூ.24 கோடி அல்லது ஒரு வீரர் மற்றும் தக்க வைத்து கொண்டது என்றால் ரூ.14 கோடி ரூபாய் பிடித்தம் செய்யப்படும்.

கம்பீர்

கம்பீர்

டெல்லி எம்.பி.யாக இருக்கும் கம்பீர், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் சென்னை அணி எந்த 4 வீரர்களை தக்க வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார். இளம்வீரர் ருத்துராஜ் கெய்க்வாட், ஆல் ரவுண்டர் ஜடேஜா, டுபிளஸிஸ், சாம் கரண் ஆகிய 4 வீரர்களை மட்டும் தான் தக்க வைத்து கொள்ள வேண்டும் என்றும் மற்றவர்களை ஏலத்தில் தேர்வு செய்து கொள்ளலாம் என்று கம்பீர் கூறினார்

தோனி

தோனி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் தோனியின் பெயரை கம்பீர் குறிப்பிடவில்லை. தோனியின் ஃபார்ம் சற்று பாதிக்கப்பட்டு இருந்தாலும், அணியை வழிநடத்தி முக்கிய போட்டிகளில் ரன் குவித்துவிடுவார். சென்னை அணி நிர்வாகமே தோனியை தான் தாங்கள் முதல் விரராக தக்க வைப்போம் என்று கூறிய பிறகும் கம்பீர் வேண்டும் என்றே, அவர் பெயரை குறிப்பிடாமல் விட்டுள்ளார்

வன்மம்

வன்மம்

தோனியை பிடிக்கவில்லை என்ற ஒரே காரணத்திற்காக தான் அவரை கம்பீர் தேர்வு செய்யவில்லை என்று ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். உலகக் கோப்பையை வென்று தந்த கேப்டன் என்ற முறையில் யாராவது பாராட்டினால், நானும் தான் ரன் அடித்தேன் என்று வெளிப்படையாக கேட்கும் அளவிற்கு கம்பீர் தோனி மீது பொறாமை கொண்டவர் என ரசிகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
English summary
Gambhir again hates Dhoni by giving comment on IPL Retention. Gambhir Leaves out MS Dhoni's name in CSK Retention list.
Story first published: Tuesday, November 30, 2021, 11:18 [IST]
Other articles published on Nov 30, 2021
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X