For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதை எதுக்குங்க நாலா பிரிச்சு விளையாடணும்.. விட்ருங்க.. ஒரே போடாக போட்ட கம்பீர், பிரட் லீ

டெல்லி: டி 20 போட்டிகளை நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரிக்கும் யோசனைக்கு கெளதம் கம்பீர், பிரட் லீ ஆகியோர் கடும் ஆட்சேபனை தெரிவித்துள்ளனர்.

Recommended Video

அவருக்காக உயிரை கூட கொடுப்பேன்... உணர்ச்சிவசப்பட்ட கம்பீர்

இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர். அதேபோல ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப் பந்து வீச்சாளர் பிரட் லீ. டி 20 போட்டிகளை 4 இன்னிங்ஸ்களாகப் பிரிக்கும் யோசனைக்கு இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கிரிக்கெட்டில் புதுமையைப் புகுத்தவும், அதிக அளவிலான ரசிகர்களை ஈர்க்கவும் டி20 போட்டிகளை நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரித்து நடத்தலாம் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ரோஹித் ஒழுங்காவே ஆடலை.. அப்ப இந்தியா என்ன பண்ணாங்க தெரியுமா? பாக். டீமிலும் அதை செய்யணும்!ரோஹித் ஒழுங்காவே ஆடலை.. அப்ப இந்தியா என்ன பண்ணாங்க தெரியுமா? பாக். டீமிலும் அதை செய்யணும்!

4 இன்னிங்ஸ்களாகப் பிரிக்கக் கூடாது

4 இன்னிங்ஸ்களாகப் பிரிக்கக் கூடாது

இதுதொடர்பாக ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஷோவான கிரிக்கெட் கனெக்டட் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கம்பீர் கூறுகையில், டி 20 போட்டிகளை நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரிக்க நான் ஆதரவு தர மாட்டேன். ஆனால் முன்பு சச்சின் டெண்டுல்கர் ஒரு யோசனையைக் கூறியிருந்தார். 50 ஓவர் போட்டிகளை பிரித்து இதுபோல விளையாடலாம் என்று கூறியிருந்தார். அது நல்ல யோசனை. அது சாத்தியமும் கூட. அதை செய்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.

50 ஓவர் போட்டிகளைப் பிரிக்கலாம்

50 ஓவர் போட்டிகளைப் பிரிக்கலாம்

50 ஓவர் போட்டிகளைப் பிரித்தால் ஆளுக்கு 25 ஓவர்களாவது கிடைக்கும். ஆனால் டி20 போட்டிகளைப் பிரித்தால் போதிய ஓவர்கள் கிடைக்காது என்று கம்பீர் கூறினார். பிரட் லீயும் இதே கருத்தையே முன்வைத்தார். அவர் கூறுகையில், சில போட்டிகளை அப்படியே விட்டு விட வேண்டும். அதில் மாற்றம் செய்யக் கூடாது. இந்தியன் பிரீமியர் லீக்கோ இல்லை பிக் பாஷ் போட்டியோ அதை அப்படியே விட்ருங்க. டி 20 , டி20 போட்டிகளாகவே இருக்கட்டும் என்றுள்ளார்.

அபத்தமாக இருக்குமே

அபத்தமாக இருக்குமே

டி 20 போட்டிகள் இப்போதே ரசிகர்களின் பெரும் ஆதரவுடன்தான் இருக்கிறது. அதில் மாற்றம் செய்வதால் பெரிய பலன் கிடைத்து விடாது. சோதனை ரீதியாகக் கூட அதைச் செய்யத் தேவையில்லை. குறிப்பாக 20 ஓவர் போட்டிகளை நான்கு இன்னிங்ஸ்களாகப் பிரிப்பது என்பது ரொம்ப ஓவர். கேட்கவே நல்லா இல்லையே. முயற்சித்துப் பார்த்தால் ரொம்ப அபத்தமாகவே இருக்கும் என்றார் பிரட் லீ.

ஆளுக்கு 10 ஓவர்

ஆளுக்கு 10 ஓவர்

கம்பீர் மேலும் கூறுகையில், டி 20 போட்டிகள் இப்போதே குறுகிய நேரத்தில்தான் நடக்கின்றன. அதை ஆளுக்கு 10 ஓவர்கள் என்று பிரித்து நான்கு இன்னிங்ஸ்களாக மாற்றி ஆடுவது என்பது சரியாக இருக்காது. ரசிகர்களையும் அது கவர வாய்ப்பில்லை என்றார் கம்பீர். கம்பீர் இந்திய அணியில் சிறப்பான ஆட்டக்காரராக வலம் வந்தவர். ஐபிஎல் போட்டிகளிலும் ஒரு கலக்கு கலக்கியவர் என்பது நினைவிருக்கலாம்.

Story first published: Tuesday, May 5, 2020, 13:21 [IST]
Other articles published on May 5, 2020
English summary
Former Indian opener Gautam Gambhir and former Aussie pacer Brett Lee Opposed the idea of splitting T20s into 4 Innings
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X