For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அவர் ஒருபோதும் இப்படி பேசமாட்டார்.. டிராவிட்டை பாத்து கத்துக்கோங்க..ரவி சாஸ்திரியை காய்ச்சிய கம்பீர்

கொல்கத்தா: இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி குறித்து கவுதம் கம்பீர் கிண்டலடித்துள்ளார்.

Recommended Video

Ravi Shastri-க்கும் Dravid-க்கும் இடையே உள்ள வித்தியாசம் இதுதான்.. Gambhir சொன்ன தகவல்

டி20 உலகக்கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் நிறைவடைந்தது.

3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!3 ஆண்டுகள் போராட்டத்திற்கு பிறகு உண்மையான “பிகில்” அணிக்கு அங்கீகாரம்..!!

அவருக்கு அடுத்தபடியாக முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் அடுத்த பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறப்பான கோச்சிங்

சிறப்பான கோச்சிங்

ரவி சாஸ்திரியின் காலத்தில் இந்திய அணி மிகச்சிறப்பாக தான் செயல்பட்டுக்கொண்டிருந்தது. டெஸ்ட் தரவரிசையில் இந்தியா தான் நம்பர் 1 இடத்தில் இருந்தது. இதே போல அவர் பயிற்சியாளராக இருந்த போது தான் இந்திய அணி இருமுறை ஆஸ்திரேலிய அணியை டெஸ்ட் தொடரில் அவர்கள் மண்ணிலேயே வீழ்த்தி சாதனை படைத்தது. இங்கிலாந்திலும் வெற்றிகளை குவித்தது.

கம்பீரின் சீண்டல்

கம்பீரின் சீண்டல்

இந்நிலையில் ரவிசாஸ்திரி குறித்து கம்பீர் கிண்டலடித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள அவர், நாம் நன்றாக ஆடும்போது நம்மைப் பற்றி நாமே உயர்த்திப் பேசுவதும், பெருமை பேசிக்கொண்டு இருப்பதும் ஆச்சரியமாக உள்ளது. மற்றவர்கள்தான் நம்மை புகழ வேண்டுமே தவிர தற்பெருமை கூடாது. 2011 உலகக்கோப்பையை வென்ற போது இந்த இந்திய அணி உலகிலேயே சிறந்தது என்றெல்லாம் யாரும் சொல்லவில்லை.

நாம் வெல்கிறோம் என்றால் மற்றவர்கள் அதைப்பற்றி பெருமையாக பேசட்டும். ஆனால் ரவி சாஸ்திரியே இந்திய அணி தான் உலகில் சிறந்த அணி என்பது போல பெருமை பாடுகிறார்.

கடும் விமர்சனம்

கடும் விமர்சனம்

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றினால் அது பெரிய சாதனைதான். இல்லையென்று கூறவில்லை. இங்கிலாந்திலும் நன்றாக விளையாடி வெற்றி கண்டார்கள். ஆனால் புகழ்வதை மற்றவர்கள் செய்யட்டும். ராகுல் டிராவிட், என்னதான் பெரும் சாதனைகளை படைத்தாலும், அவரிடம் தற்பெருமை இருக்காது. எப்போதும் ஒரே மாதிரியாக இருக்கும். ஆனால் அதனை ரவிசாஸ்திரி செய்யவில்லை.

 ஆறுதல் கூறிய டிராவிட்

ஆறுதல் கூறிய டிராவிட்

நன்றாக ஆடுகிறோமோ இல்லையோ, தன்னடக்கம் மிக மிக முக்கியம். கிரிக்கெட் எப்போதும் நம் வாழ்க்கையில் வந்து கொண்டேயிருக்காது. டிராவிட் அந்தவகையில் சிறந்தவர் என கம்பீர் தெரிவித்துள்ளார். கம்பீரின் கருத்திற்கு ஏற்ப, நியூசிலாந்து தொடரை வென்றுக்கொடுத்த டிராவிட், நியூசிலாந்து அணி வீரர்களை பாராட்டி ஆறுதல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Story first published: Monday, November 22, 2021, 15:30 [IST]
Other articles published on Nov 22, 2021
English summary
Gambhir criticises Ravi Shastri, gives a statement about major difference between the shastri and Dravid
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X