For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திறமை குறைந்த அணியை கோலியிடம் விட்டு சென்ற தோனி... கொளுத்திப் போட்ட கம்பீர்

டெல்லி : திறமை குறைந்த அணியை கேப்டன் கோலியிடம் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி விட்டு சென்றதாக முன்னாள் இந்திய அணியின் துவக்க வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

BCCi to reschedule Australia and England series

மாறாக முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமானா சவுரவ் கங்குலி தோனியிடம் திறமையான அணியை விட்டு சென்றதாகவும் கம்பீர் கூறியுள்ளார்.

எம்எஸ் தோனியிடம் திறமையான அணி வழங்கப்பட்டதால் அவரால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடிந்ததாகவும் மாறாக கோலியிடம் திறமை குறைந்த வீரர்கள் அளிக்கப்பட்டதால் அவரால் ஐசிசி கோப்பைகளை வெல்ல முடியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி!அவங்க ஒழுங்கா ஆடலை.. நானே பேசறேன்.. கோலி, ரவி சாஸ்திரிக்கு செக்.. அதிர வைத்த கங்குலி!

ஐசிசி கோப்பைகளை வெல்லாத கோலி

ஐசிசி கோப்பைகளை வெல்லாத கோலி

கேப்டன் விராட் கோலி கடந்த 2014ல் டெஸ்ட் போட்டிகளுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து 2017ல் அனைத்து வடிவங்களின் கேப்டனாக பொறுப்பேற்றார். இதுவரை தன்னுடைய கேப்டன்ஷிப்பின் கீழ் விளையாடப்பட்ட 55 போட்டிகளில் 33 போட்டிகளில் வெற்றி பெற்று அதிகமான டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றவர் என்ற பெருமைக்குரியவராக கோலி உள்ளார்.

கேள்விக்குறியான கேப்டன்ஷிப்

கேள்விக்குறியான கேப்டன்ஷிப்

ஆயினும் ஐசிசியின் கோப்பைகளை வெற்றி கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு விராட் கோலி மீது உள்ளது. அவருக்கு முந்தைய கேப்டனான எம்எஸ் தோனி ஐசிசியின் ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பைகள், சாம்பியன் டிராபி உள்ளிட்ட ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வெற்றி பெற்றுள்ள நிலையில், கோலியின் கேப்டன்ஷிப் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

தோனி மீது கம்பீர் குற்றச்சாட்டு

தோனி மீது கம்பீர் குற்றச்சாட்டு

இந்நிலையில் விராட் கோலியிடம் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி திறமை குறைந்த அணியை விட்டு சென்றதாக முன்னாள் துவக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர் குற்றம் சாட்டியுள்ளார். விராட் கோலி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகிய வீரர்கள் மட்டுமே இந்த அணியில் திறமையானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தோனியிடம் ஒப்படைத்த கங்குலி

தோனியிடம் ஒப்படைத்த கங்குலி

மாறாக எம்எஸ் தோனியிடம் முன்னாள் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங், ஜாகிர் கான், வீரேந்திர சேவாக் ஆகிய உலக அளவிலான வீரர்களை ஒப்படைத்ததாகவும் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அதனால்தான் அவரால் உலக அளவிலான கோப்பைகளை வெற்றி கொள்ள முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Tuesday, July 14, 2020, 11:22 [IST]
Other articles published on Jul 14, 2020
English summary
MS Dhoni didn’t give successor Virat Kohli enough 'quality players’ -Gambhir
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X