For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கங்குலி கொடுத்த வாய்ப்பு.. சூப்பர் கேப்டன் தோனி.. நினைவுகளை பகிர்ந்து உடைந்த யுவி!

இந்திய அணியில் கங்குலி மற்றும் தோனிக்கு கீழ் விளையாடிய அனுபவங்கள் குறித்து யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.

லண்டன்: இந்திய அணியில் கங்குலி மற்றும் தோனிக்கு கீழ் விளையாடிய அனுபவங்கள் குறித்து யுவராஜ் சிங் பகிர்ந்துள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் யுவராஜ் சிங் அறிவித்துள்ளார். அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்து முற்றிலுமாக ஓய்வு பெறுகிறேன். டெல்லியில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

செய்தியாளர்கள் முன்னிலையில் யுவராஜ் சிங் மிகவும் உருக்கமாக பேசினார். கங்குலிக்கு கீழ் விளையாடியது தொடங்கி உலகக் கோப்பை போட்டி வரை தான் கடந்து வந்த பாதைகள் குறித்து பேசினார்.

தோனி இதுல பர்ஸ்ட் கிடையாது...!! கிறிஸ் கெயிலுக்கு அந்த பெருமை... யாருக்காவது தெரியுமா? தோனி இதுல பர்ஸ்ட் கிடையாது...!! கிறிஸ் கெயிலுக்கு அந்த பெருமை... யாருக்காவது தெரியுமா?

கங்குலி

கங்குலி

தனது கிரிக்கெட் அனுபவங்களை யுவராஜ் சிங் இதில் பகிர்ந்து கொண்டார். அதில், சவுரவ் கங்குலிதான் எனக்கு வாய்ப்பு கொடுத்தது. நான் எனது குரு ரோல்மாடல் சச்சினுக்கு கீழ் விளையாடி இருக்கிறேன். அதேபோல் ராகுல் டிராவிட், கும்ப்ளே, ஸ்ரீநாத், விவி லட்சுமணன், சேவாக், கவுதம் கம்பீர், ஹர்பஜன் சிங் ஆகியோருடன் விளையாடி இருக்கிறேன்.

நிறைய நண்பர்கள்

நிறைய நண்பர்கள்

எனக்கு இந்திய அணியில் நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். நண்பர்கள் இல்லாதவர்களும் இருக்கிறார்கள். 2011 உலகக் கோப்பையில் தோனியின் சிறப்பான தலைமையில் நாங்கள் உலகக் கோப்பையை வென்றோம். கேரி கிறிஸ்டன்தான் உலகின் சிறந்த கோச். எனக்கு வாய்ப்பு கொடுத்த கங்குலிக்கு நன்றி.

மிக்க நன்றி

மிக்க நன்றி

கேரி கிறிஸ்டன்தான் எனக்கு மிக சிறப்பான பயிற்சியை அளித்தது. எனக்கு சிறு வயதில் இருந்து பயிற்சி அளித்தவர்களுக்கு நன்றி. என்னுடைய பள்ளியில் எனக்கு பயிற்சி அளித்தவர்கள், என்னுடைய கிளப்பில் பயிற்சி அளித்த எல்லோருக்கும் மிக்க நன்றி. ஐபிஎல் அணிகளுக்கும் மிக்க நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

அணிகள்

அணிகள்

பாகிஸ்தான், ஆஸ்திரேலியா போன்ற அணிகள் உடன் விளையாடியது பெரிய மகிழ்ச்சி. 2007 உலகக் கோப்பையில் தோல்வி அடைந்து 2011 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதும், இலங்கையை வீழ்த்தியதும் எனக்கு எப்போதும் நினைவில் இருக்கும்.

குடும்பம் முக்கியம்

குடும்பம் முக்கியம்

என் அம்மா எப்போதும் எனக்கு துணையாக என்னுடன் இருந்தார். என் அப்பா இப்போது இல்லை . கடைசியாக என் குடும்பத்திற்கும், என் மனைவிக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், நான் விடைபெறும் நேரம் வந்துவிட்டது என்று உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

Story first published: Monday, June 10, 2019, 15:10 [IST]
Other articles published on Jun 10, 2019
English summary
Ganguly gave me the chance, Dhoni is super captain says Yuvraj on his retirement speech.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X