For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கில்லாடி கங்குலிக்கு புதிய பதவி.. பி.சி.சி.ஐ.க்கு ரூ.1500 கோடியை மிச்சப்படுத்திய கங்குலி..

உலகில் வேறு எங்கும் இல்லாத அளவிற்கு இந்தியாவில் கிரிக்கெட் ரசிகர்கள் அதிகம். இந்தியாவால் தான் ஐ.சி.சி. என்ற அமைப்பே இயங்கி வருகிறது.

ஐ.சி.சி.க்கு கிடைக்கும் வருமானத்தில் 60 முதல் 70 சதவீதம் வரை இந்தியாவிலிருந்து கிடைக்க கூடியது. இந்தியாவில் கிரிக்கெட் மூலம் உள்ளாட்சி அமைப்புகள் முதல் , மத்திய அரசு வரை வரி வருமானம் கிடைக்கிறது

 'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்? 'இது தான் கடைசி சான்ஸ்..' தலை மீது தொங்கும் கத்தி.. இந்த 5 இந்திய வீரர்களின் எதிர்காலம் என்னவாகும்?

இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்தினால் பி.சி.சி.ஐ.க்கு வருவமானமும் கிடைக்கும், அதிலிருந்து ஐ.சி.சி.க்கும் பங்கு செல்லும்.

சிக்கல்

சிக்கல்

கிரிக்கெட் போன்ற விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு நாடுகள், பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.ஆனால் இந்தியாவில் நிலை அப்படி அல்ல. ஐ.சி.சி. போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் என இந்தியாவில் நடைபெறும் போட்டிகளுக்கு பி.சி.சி.ஐ. அரசுக்கு வரி செலுத்த வேண்டும்.ஆனால் மற்ற நாடுகளில் போட்டி நடந்தால் வரிச்சலுகை உண்டு

பறிப்போன வாய்ப்பு

பறிப்போன வாய்ப்பு

மத்திய அரசின் இந்த வரி விதிப்பால் பி.சி.சி.ஐக்கு ரூ.600 கோடி வரை இழப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. வரி விதிப்பை ரத்து செய்ய முடியாத நிலை ஏற்பட்டதால், பல ஐ.சி.சி. தொடர்களை நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு பறிப்போனது. செப்டம்பர்,அக்டோபர் மாதங்களில் பொரோனாவின் தாக்கம் குறைந்தாலும், வரி விதிப்பு காரணமாகவே ஐ.பி.எல் மற்றும் டி-20 உலகக் கோப்பையை யு.ஏ.இ.யில் நடத்த பி.சி.சி.ஐ. முடிவு எடுத்தது

ரூ.1500 கோடி மிச்சம்

ரூ.1500 கோடி மிச்சம்

தற்போது 2023ஆம் ஆண்டு முதல் 2031ஆம் ஆண்டு வரை இந்தியா 4 ஐ.சி.சி.தொடர்களை நடத்த உள்ளது. இதற்கு பி.சி.சி.ஐ. வரி செலுத்தினால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என ஐ.சி.சி.யிடம் , பி.சி.சி.ஐ. தலைவர் கங்குலி முறையிட்டார். இதனால் பி.சி.சி.ஐ. செலுத்த வேண்டிய வரியை , ஐ.சி.சி.யே செலுத்த வேண்டும் என்று கங்குலி யோசனை தெரிவித்தார். முதலில் இதற்கு அனுமதி அளிக்காத ஐ.சி.சி. பின்னர் வேறு வழியில்லாததால் ஓப்புக்கொண்டது.இதனால் பி.சி.சி.ஐ.க்கு ரூ.1500 கோடி வரை கங்குலி மிச்சப்படுத்தியுள்ளார்.

Recommended Video

இது தான் இப்ப சிக்கல்.. Indian Team-ல் செய்ய வேண்டிய மாற்றங்கள்
புதிய பதவி

புதிய பதவி

கங்கலியின் இந்த சாமர்த்தியத்தால் மகிழ்ச்சி அடைந்த பி.சி.சி.ஐ, கங்குலியை ஐ.சி.சி. கமிட்டியின் தலைவராக நியமிக்க ஆவணம் செய்தது. இதனையடுத்து, அந்த பதவியில் 9 ஆண்டுக்காலம் இருந்த கும்ப்ளே ஓய்வு பெற்ற நிலையில், அவருக்கு பதில் இனி கங்குலி செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் புதிய விதிகளை வகுப்பது, மாற்றங்களை கொண்டு வருவது, பழைய விதிகளை ரத்து செய்வது தான் இந்த ஐ.சி.சி. கமிட்டியின் பணியாகும்.

Story first published: Thursday, November 18, 2021, 20:20 [IST]
Other articles published on Nov 18, 2021
English summary
BCCI President Made ICC to Pay taxes for the World cup tournaments to happen in India. Ganguly appointed as chairman of ICC Committee
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X