For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தோனி, யுவ்ராஜ் போலதான் அவரும்.... எனக்கு நம்பிக்கை இருக்கு..பண்ட் குறித்து முன்னாள் வீரர் புகழாரம்

அகமதாபாத்: டெஸ்ட் தொடரில் அசத்திய ரிஷ்ப் பண்ட்-ஐ, முன்னாள் வீரர்கள் தோனி, சேவாக், யுவ்ராஜ் சிங்குடன் ஒப்பிட்டு கங்குலி பாராட்டியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் என இரண்டிலுமே ரிஷப் பண்ட் ஆதிக்கம் அதிகமாக காணப்பட்டது. இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வந்தனர்.

இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல் இவர்கள் தான் திருப்புமுனையை ஏற்படுத்தும் அந்த 5 வீரர்கள்..... இந்தியாவா? இங்கிலாந்து-ஆ? ஓர் அலசல்

இந்நிலையில் ரிஷப் பண்ட்-ன் அசைவுகள் தோனி, சேவாக் போன்ற மேட்ச் ஃபினிஷர்களை போல உள்ளதாக கங்குல் புகழ்ந்துள்ளார்.

இங்கிலாந்து

இங்கிலாந்து

ஆஸ்திரேலிய தொடரை தொடர்ந்து இங்கிலாந்து தொடரிலும் பண்ட் ஆதிக்கம் செலுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்திருந்தாலும் பண்ட் அடித்த 97 ரன்கள் இந்திய அணியின் தோல்வியை தடுத்தது. அதன் பின்னர் 4வது மற்றும் கடைசி போட்டியில் அவர் 89 ரன்கள் அடித்து வரலாற்று வெற்றிக்கு உதவினார்.

அதிரடி

அதிரடி

ஆஸ்திரேலியாவில் காட்டிய அதிரடியை இங்கிலாந்து டெஸ்டிலும் பண்ட் தொடர்ந்தார். முதல் டெஸ்டில் இந்திய அணி திணறிய நிலையில் 91 ரன்களை விளாசி அனைவரையும் வியக்க செய்தார்.

அதற்கு அடுத்ததாக 2வது டெஸ்டில் அரை சதமும், 4வது டெஸ்டில் சதமும் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு பெரும் உதவியாக இருந்தார்.

கங்குலி பாராட்டு

கங்குலி பாராட்டு

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு பயிற்சியாளராக இருந்த கங்குலி, ரிஷப் பண்ட் குறித்து நன்கு அறிந்த நபராவார். எனவே பண்ட்-ன் ஆட்டம் குறித்து பேசிய கங்குலி, பண்ட் குறித்து நான் நன்கு அறிவேன், அவர் ஒரு கேம் சேஞ்சர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி டிரா ஆனது. ஆனால் பண்ட் அப்போட்டியில் மேலும் ஒரு 5 - 6 ஓவர்கள் நின்று இருந்தால் இந்தியா வென்று இருக்கும்.

கேம் ஃபினிஷர்

கேம் ஃபினிஷர்

மேலும் பேசிய அவர், பண்ட் தனியாளாக நின்று போராடி ஆட்டத்தை வென்று தரக்கூடியவர். எனக்கு யுவ்ராஜ் சிங், சேவாக், எம்.எஸ்.தோனி போன்ற கேம் ஃபினிஷர்கள் மீது நம்பிக்கை உள்ளது. எனவே பண்ட்-ம் அவர்களை போன்றவர் தான். தனியாளாக நின்று போராடி வெற்றியை பெற்றுத் தருவார் என கூறியுள்ளார்.

Story first published: Tuesday, March 9, 2021, 15:31 [IST]
Other articles published on Mar 9, 2021
English summary
Ganguly Praises Rishab Pant as 'game-changer'
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X