For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

யார் அணியை தேர்வு செய்ய வேண்டும்? ரோஹித்தா? ரவி சாஸ்திரியா?.. கங்குலி கேள்வி

Recommended Video

யார் அணியை தேர்வு செய்ய வேண்டும்? ரோஹித்தா? ரவி சாஸ்திரியா?.. கங்குலி கேள்வி

மும்பை : கிரிக்கெட் விளையாட்டு கேப்டனின் ஆட்டம், இங்கே பயிற்சியாளருக்கு பின்னே அமர்ந்து பார்ப்பது மட்டும் தான் வேலை என கங்குலி கூறியுள்ளார்.

தன் "A Century is not enough" என்ற புத்தக அறிமுக விழாவில் பங்கேற்ற கங்குலி, அங்கு இருந்த பார்வையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அதில் பல சுவாரஸ்யமான கேள்வி-பதில்கள் இடம் பெற்றன. அதன் தொகுப்பு இங்கே..

கிரிக்கெட் வேற, கால்பந்து வேற

கிரிக்கெட் வேற, கால்பந்து வேற

கிரிக்கெட்டில் பயிற்சியாளர்களின் வேலை என்ன என்ற கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, "கிரிக்கெட், கால்பந்து போல அல்ல. ஆனால், இப்போது பல பயிற்சியாளர்கள் ஒரு கிரிக்கெட் அணியை, கால்பந்து அணி போல நடத்தப் போவதாக எண்ணிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், கிரிக்கெட் ஒரு கேப்டன் விளையாட்டு. பயிற்சியாளர் பின்னே அமர்ந்து பார்ப்பதுதான் தான் வேலை. அது மிக முக்கியம்" என கூறினார்.

பயிற்சியாளருக்கு என்ன வேலை

பயிற்சியாளருக்கு என்ன வேலை

ஒரு பயிற்சியாளர் "ஆட்கள் மேலாண்மை" செய்வதில் தான் கவனம் செலுத்த வேண்டும். அந்த திறன் மிக சிலருக்கு தான் இருக்கிறது. அதே போல, தன் கிரிக்கெட் வாழ்வில் தான் கற்றுக் கொண்ட பாடம் "பயிற்சியாளரை தேர்வு செய்யக் கூடாது" என்பது தான் எனவும் தெரிவித்தார் கங்குலி.

ரவி சாஸ்திரியிடம் கேள்வி

ரவி சாஸ்திரியிடம் கேள்வி

ரவி சாஸ்திரியிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என கேட்டதற்கு, "யார் அணியை தேர்வு செய்வார்கள்? ரோஹித் சர்மாவா? அல்லது ரவி சாஸ்திரியா?" என கேட்பேன் என கூறினார். ரோஹித் சர்மா தான் ஆசிய கோப்பை இந்திய அணியின் கேப்டன். ஒரு கேப்டன் அணியை தேர்வு செய்வதா, அல்லது பயிற்சியாளர் தேர்வு செய்வதா என்பதே கங்குலி கேட்க விரும்பும் கேள்வி.

கோலிக்கு அட்வைஸ்

கோலிக்கு அட்வைஸ்

அது போல மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த கங்குலி, "இன்று நிறைய திறமையான வீரர்கள் அடுத்த போட்டியில் வாய்ப்பு கிடைக்குமா என தெரியாமல் இருக்கிறார்கள். விராட் கோலி அந்த விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் சிரமமான சூழ்நிலையில் எப்படி செயல்படுகிறார்கள் என்பதை பார்த்து அவர்களை ஆதரிக்க வேண்டும்" என கூறினார்.

Story first published: Tuesday, September 25, 2018, 13:38 [IST]
Other articles published on Sep 25, 2018
English summary
Ganguly says Cricket is captain’s game and Coach have to stay back. He also asks who have to chose the team Rohit Sharma or Ravi Shasthri?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X