For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

முதல் வேலையே அதான்.. தோனிக்கு நாள் குறித்த கங்குலி.. விரைவில் கிளைமாக்ஸ்?

Recommended Video

Will discuss Dhoni's future with selectors : Ganguly

மும்பை : தோனி நீண்ட விடுப்பில் இருக்கும் நிலையில், அவர் தொடர்ந்து கிரிக்கெட் ஆடுவாரா? இல்லையா? என தானே கேட்க உள்ளதாக தெரிவித்து அதிர வைத்துள்ளார் பிசிசிஐ தலைவர் ஆகப் போகும் கங்குலி.
தோனி கடந்த உலகக்கோப்பை தொடருக்குப் பின் இந்திய அணியில் இடம் பெறவில்லை. அவராகவே விடுப்பு எடுத்துக் கொண்டு இருக்கிறார்.
அது குறித்து பல்வேறு வதந்திகள் மட்டுமே உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், அந்த ரகசியத்திற்கு முடிவுரை எழுதப் போகிறார் கங்குலி.

தோனி ஓய்வு

தோனி ஓய்வு

2019 உலகக்கோப்பை தொடருடன் தோனி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்று முதலில் வதந்தி பரவியது. ஆனால், தோனி இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை.

நீண்ட விடுப்பு

நீண்ட விடுப்பு

தோனி அவராகவே கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கி இருந்தார் என பிசிசிஐ கூறியது. முதலில் இரண்டு மாத விடுப்பில் இருந்த அவர், தற்போது நவம்பர் மாதம் வரை விடுப்பை நீட்டித்துக் கொண்டு இருக்கிறார்.

புரியாத புதிர்

புரியாத புதிர்

தோனி ஓய்வு பெறப் போகிறாரா? மீண்டும் இந்திய அணியில் இணைந்து ஆட வேண்டும் என நினைக்கிறாரா? டி20 உலகக்கோப்பை வரை ஆட வேண்டும் என நினைக்கிறாரா? என்பதும் யாருக்குமே தெரியவில்லை. உலகக்கோப்பைக்கு பின் தோனி புரியாத புதிராகவே இருந்து வருகிறார்.

தலைவராகும் கங்குலி

தலைவராகும் கங்குலி

இதற்கிடையே பிசிசிஐ தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியின்றி தலைவர் ஆக இருக்கிறார் கங்குலி. பிசிசிஐ அதிகாரக் குழுக்கள் இணைந்து அவரை தலைவராக தேர்வு செய்ய ஒப்புக் கொண்டன. பிசிசிஐ தலைவர் பதவிக்கு கங்குலி மட்டுமே மனுதாக்கல் செய்துள்ளார்.

பதவியேற்பு நாள்

பதவியேற்பு நாள்

வரும் அக்டோபர் 23 அன்று பிசிசிஐ பொதுக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. அப்போது கங்குலி அதிகாரப்பூர்வமாக பிசிசிஐ தலைவராக பதவி ஏற்பார். அதன் பின் பிசிசிஐ கட்டுப்பாடு முழுவதும் கங்குலியிடம் வந்து விடும்.

வங்கதேச தொடர் அணித் தேர்வு

வங்கதேச தொடர் அணித் தேர்வு

அக்டோபர் 24 அன்று வங்கதேச கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணித் தேர்வு நடைபெற உள்ளது. அப்போது இந்திய தேர்வுக் குழு மற்றும் கேப்டன் பிசிசிஐ-யில் கூடி அணியை தேர்வு செய்வார்கள்.

முதல் வேலை

முதல் வேலை

அதைக் குறிப்பிட்டுள்ள கங்குலி, தான் பதவி ஏற்ற பின் அக்டோபர் 24 அன்று நடைபெற உள்ள தேர்வுக் குழு கூட்டத்தில் தோனி குறித்து தேர்வுக் குழு என்ன நினைக்கிறார்கள் என்பதை கேட்பேன் என்று கூறி இருக்கிறார்.

தோனியிடம் பேசுவேன்

தோனியிடம் பேசுவேன்

மேலும், தோனிக்கு என்ன வேண்டும் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். நான் கூட அவரிடம் பேசுவேன். அவருக்கு என்ன செய்ய வேண்டும், என்ன செய்ய வேண்டாம் என்பது குறித்து கேட்டு அறிவேன் எனவும் கூறி அதிர வைத்துள்ளார் கங்குலி.

முடிவு செய்ய வேண்டும்

முடிவு செய்ய வேண்டும்

இதுவரை தோனி குறித்து கேட்கும் இடத்தில் நான் இல்லை. தற்போது நான் தோனி குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய இடத்தில் இருக்கிறேன். மேலும், அடுத்து என்ன செய்ய வேண்டும் என முடிவு செய்யவும் வேண்டும் என்றார்.

கிளைமாக்ஸ்-ஆ? இடைவேளையா?

கிளைமாக்ஸ்-ஆ? இடைவேளையா?

கங்குலி தலைவர் ஆனவுடன் முதல் வேலையே தோனி ஓய்வு ரகசியத்தை தெரிந்து கொள்வது தான் என கூறி இருக்கிறார். தோனியுடன், கங்குலி பேசிய பின் அவரது ஓய்வு அறிவிப்பு எனும் கிளைமாக்ஸ் காட்சி நடக்குமா? அல்லது தோனி மீண்டும் கிரிக்கெட் ஆடுவார் என்ற செய்தி வெளி வருமா?

Story first published: Thursday, October 17, 2019, 20:07 [IST]
Other articles published on Oct 17, 2019
English summary
Ganguly says he will talk to Dhoni about his plans. Will it bring curtains down for Dhoni? Or he will begin his second innings?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X