பும்ரா சர்ச்சை.. முடிவு கட்டாம விடக்கூடாது.. டிராவிட்டை சந்திக்கும் கங்குலி.. அதிர வைக்கும் தகவல்!

பெங்களூரு : பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ராகுல் டிராவிட்டை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயம் ஏற்பட்ட புவனேஸ்வர் குமார் மற்றும் புஜாரா விஷயத்தில் என்சிஏ தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என்ற புகார் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

இதேபோல கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பது குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

யூனியன் பிரதேசமாக மாறிய காஷ்மீரில் நடந்த முதல் விளையாட்டுப் போட்டி.. வாகை சூடிய காஷ்மீர் அணி!

என்சிஏ இயக்குநரை சந்திக்க திட்டம்

என்சிஏ இயக்குநரை சந்திக்க திட்டம்

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தேசிய கிரிக்கெட் அகாடமியின் இயக்குநர் ராகுல் டிராவிட்டை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சந்திப்பின் முக்கிய அம்சம்

சந்திப்பின் முக்கிய அம்சம்

பந்துவீச்சாளர் புவனேஸ்வர்குமார் மற்றும் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் காயமடைந்த நிலையில், அவர்களுக்கான சிகிச்சையில் என்சிஏ சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ஆலோசிக்க முடிவு

ஆலோசிக்க முடிவு

இதேபோல கிரிக்கெட் ஆலோசனைக் குழுவிற்கு புதிய உறுப்பினரை தேர்ந்தெடுப்பது குறித்தும் கங்குலி மற்றும் டிராவிட் இருவரும் ஆலோசனை மேற்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது.

தீர்வுக்கான பேச்சுவார்த்தை

தீர்வுக்கான பேச்சுவார்த்தை

இரு அணிகளுக்கிடையில் தொடர் சர்ச்சைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், இதனால் கங்குலி மற்றும் டிராவிட் பாதிப்படைவதாகவும் கூறப்படுகிறது. இவைகுறித்து இந்த பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts
 
English summary
Sourav Ganguly to Meet Rahul Dravid to discuss about injury management - report
Story first published: Thursday, December 26, 2019, 17:07 [IST]
Other articles published on Dec 26, 2019
POLLS
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X