For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

தம்பி அப்ரிடி..! நீ வளரவே இல்லை.. குழந்தைங்க புக் வாங்கி அனுப்புறேன்..! தெறிக்கவிட்ட இந்திய வீரர்

Recommended Video

Gautam gambhir criticizes shahid afridi over Kashmir tweet

டெல்லி: காஷ்மீர் தொடர்பாக குரல் கொடுத்த பாக். முன்னாள் வீரர் அப்ரிடியை, குழந்தைகள் புத்தகம் வாங்கி தருகிறேன், உட்கார்ந்து படியுங்கள் என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கேலி செய்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370 ஐ, 35A நீக்கும் மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதலை பெற்று, மத்திய அரசு நீக்கியது. அதற்கான அறிவிப்பும் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப் பட்டது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உருவாக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதற்கு பாகிஸ்தான் தொடர்ந்து எதிர்ப்பு குரல் எழுப்பி வருகிறது.குறிப்பாக பிரதமர் இம்ரான்கான், வாரம் ஒருமுறை அரை மணி நேரம் நின்றுகொண்டு காஷ்மீர் மக்களுக்கு ஆதரவு கரம் பாகிஸ்தான் நீட்டுகிறது என்பதை தெரிவிக்கும் வண்ணம் செயல்படுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிரமம் கொடுக்காமல் அவராவே ஒதுங்கிடுவார்.. மூத்த வீரர் பற்றி வெளியான அந்த ரகசியம்!சிரமம் கொடுக்காமல் அவராவே ஒதுங்கிடுவார்.. மூத்த வீரர் பற்றி வெளியான அந்த ரகசியம்!

நினைவில் கொள்வோம்

நினைவில் கொள்வோம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டை தொடக்கம் முதலே விமர்சித்து வரும் நபர்களில், முக்கியமானவர் கிரிக்கெட் வீரர் அப்ரிடி. நமது பிரதமர் இம்ரான் கான் கூறியதை நினைவில் கொண்டு செயல்படுவோம்.

காஷ்மீர் விடுதலை

இந்த வாரம் வெள்ளிக்கிழமை 12 மணிக்கு குறிப்பிட்ட பகுதியில் நான் இருப்பேன். என்னுடன் இணைய நினைப்பவர்கள் இணைந்து கொள்ளலாம். காஷ்மீர் பகுதி மக்களுக்காகவும், விடுதலைக்காகவும் குரல் கொடுப்போம் என்று அண்மையில் பதிவிட்டு இருந்தார்.

கம்பீர் கண்டனம்

கம்பீர் கண்டனம்

அதற்கு இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய பாஜக எம்பியுமான கவுதம் கம்பீர் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பல முறை அப்ரிடியின் நடவடிக்கைகளை அவர் கடுமையாக விமர்சித்திருக்கிறார். இப்போதும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:

குழந்தைகள் புத்தகம்

இந்த படத்தில் காணப்படும் சாகித் அப்ரிடி, சந்தேகம் இல்லாமல் தான் யார் என்பதை கூறியிருக்கிறார். இந்த விஷயத்தில் இனி சந்தேகமே வேண்டாம். அவர் இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. அவரது உதவிக்காக ஆன்லைனில் குழந்தைகளுக்கான புத்தகம் ஆர்டர் செய்கிறேன் என்று கிண்டலாக கூறி இருக்கிறார்.

தொடர்ந்து மோதல்

தொடர்ந்து மோதல்

முன்னதாக, இவர்கள் இருவரும் 2007ம் ஆண்டும் கான்பூரில் நடைபெற்ற ஒருநாள் போட்டியின்போது கடுமையாக மோதிக்கொண்டனர். தொடர்ந்து இருவரும் களத்தில் மட்டுமே மோதிக்கொண்ட நிலையில், அரசியல் நிலைப் பாட்டிலும் மோதி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Thursday, August 29, 2019, 11:23 [IST]
Other articles published on Aug 29, 2019
English summary
Gautam gambhir criticizes shahid afridi over Kashmir tweet.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X