For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அவரால் சத்தியமா முடியாது”.. கே.எல்.ராகுலுக்கு வந்த திடீர் அழைப்பு.. வேண்டாம் என கம்பீர் எச்சரிக்கை!

மும்பை: இந்திய அணியின் துணைக்கேப்டனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் டெஸ்ட் கிரிக்கெட்டில் செய்யவே முடியாது என கம்பீர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த தொடரில் அனைவரின் விமர்சனங்களையும் பெற்றிருந்த ரகானே மற்றும் புஜாரா ஆகியோர் கம்பேக் கொடுத்துவிட்டனர்.

“புஜாரா - ரகானேவின் இடம் உறுதி”.. 3வது டெஸ்ட் குறித்து கே.எல்.ராகுல் தகவல்.. இளம் வீரர் சோகம்! “புஜாரா - ரகானேவின் இடம் உறுதி”.. 3வது டெஸ்ட் குறித்து கே.எல்.ராகுல் தகவல்.. இளம் வீரர் சோகம்!

பண்ட் மீது விமர்சனம்

பண்ட் மீது விமர்சனம்

இந்நிலையில் ரிஷப் பண்ட் மீது அந்த விமர்சனங்கள் திரும்பியுள்ளன. 2வது டெஸ்டின் 2வது இன்னிங்ஸின் போது ரிஷப் பண்ட் 3வது பந்திலேயே சிக்ஸர் அடிக்க முயன்று டக் அவுட்டானார். அது தான் அவரின் பேட்டிங் ஃபார்ம் குறித்த விமர்சனங்களை எழுப்பியுள்ளது. 3வது டெஸ்டில் அது இன்னும் வழுத்துள்ளது. முதல் இன்னிங்ஸில் மோசமான ஷாட் தேர்வால் 27 ரன்களுக்கு விக்கெட்டை பறிகொடுத்தார்.

ரசிகர்களின் கோரிக்கை

ரசிகர்களின் கோரிக்கை

இதனால் ரிஷப் பண்ட் மீது ஆத்திரமடைந்த முன்னாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள், அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் எனக் கோரி வருகின்றனர். மேலும் விக்கெட் கீப்பிங் பொறுப்பை கே.எல்.ராகுலிடம் கொடுத்துவிட்டால், அணிக்கு கூடுதலாக மற்றொரு பேட்ஸ்மேன் கிடைப்பார் எனத்தெரிவித்துள்ளனர்.

என்ன காரணம்

என்ன காரணம்

அது கே.எல்.ராகுலுக்கு சாத்தியமே இல்லை என முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கே.எல்.ராகுல் ஓப்பனராக மட்டுமே இருக்க வேண்டும். டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் ஓப்பனிங் வீரர், விக்கெட் கீப்பராக செயல்படக்கூடாது. விக்கெட் கீப்பர் சுமார் 150 ஓவர்களுக்கு களத்தில் இருப்பார். அதனை முடித்தவுடனே ஓப்பனராக எப்படி ஒருவரால் களமிறங்க முடியும்.

Recommended Video

Who Can Replace Washington Sundar in the Indian ODI squad | OneIndia Tamil
என்ன தேவை

என்ன தேவை

ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் அது சாத்தியம். ஆனால் டெஸ்ட் போட்டிகள் போன்ற் நீண்ட ஆட்டங்களுக்கு அது சரியாக இருக்காது. ஓப்பனிங் வீரர் மிகவும் துடிப்புடன் முதல் பந்தை எதிர்கொண்டு அணிக்கு நம்பிக்கை தரவேண்டும். விக்கெட் கீப்பிங் பணியை முடித்துவிட்டு வந்தால், அவரால் சோபிக்க முடியாது. எனவே தனியாக மிடில் ஆர்டரில் ஆடக்கூடிய விக்கெட் கீப்பர் தேவை எனக்கூறியுள்ளார்.

Story first published: Wednesday, January 12, 2022, 19:37 [IST]
Other articles published on Jan 12, 2022
English summary
Gautam Gambhir explains why KL Rahul Can't replace the rishabh pant's wicket keeping duty in test cricket
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X