For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“என் சொந்த பணத்தில் அனைத்தும் செய்தேன்”.. அரசியலில் இருக்கும் போது ஐபிஎல் எதற்கு.. கம்பீர் பதிலடி!

மும்பை: அரசியலில் ஈடுபட்டுள்ள போதும் எதற்காக ஐபிஎல் தொடரில் பணியாற்றினேன் என்பது குறித்து கம்பீர் பேசியுள்ளார்.

ஐபிஎல் தொடரின் 15வது சீசன் போட்டிகள் சமீபத்தில் முடிவுக்கு வந்தது. இதில் புதிய அணியான குஜராத் அணி கோப்பையை வென்றது.

மற்றொரு புதிய அணியான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுவரை சென்று வெளியேறியது.

ஐபிஎல் ஃபிக்சிங் - ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசு வழங்கிய தொழில் அதிபர்.. வெடித்தது புதிய சர்ச்சைஐபிஎல் ஃபிக்சிங் - ஹர்திக் பாண்டியாவுக்கு பரிசு வழங்கிய தொழில் அதிபர்.. வெடித்தது புதிய சர்ச்சை

குவியும் விமர்சனங்கள்

குவியும் விமர்சனங்கள்

லக்னோ அணியின் தொடர் வெற்றிகளுக்கு அதன் ஆலோகராக செயல்பட்ட கவுதம் கம்பீர் முக்கிய காரணம் எனக்கூறலாம். டெல்லியில் பாஜக எம்.பியாக செயல்பட்டு வருகிறார். அரசியல் பணிகளின் போதும், அவர் ஐபிஎல் தொடரில் கவனம் செலுத்தி பணியாற்றி வந்தார். இதற்கு பல தரப்பிலும் இருந்தும் விமர்சனங்கள் குவிந்தன.

கவுதம் கம்பீர் பதிலடி

கவுதம் கம்பீர் பதிலடி

இந்நிலையில் அதற்கெல்லாம் கம்பீர் பதிலடி கொடுத்துள்ளார். அதில், 5000 மக்கள் உணவு உண்பதற்காக நான் மாதந்தோறும் ரூ.25 லட்சம் செலவளிக்கிறேன். ஆண்டுக்கு சுமார் ரூ.2.75 கோடியாகும். இதே போல நூலகத்தை நடுத்துவதற்காக ரூ.25 லட்சம் செலவு செய்கிறேன். இதையெல்லாம் எம்.பி நிதியில் இருந்து எடுக்கவில்லை. எனது சொந்த செலவில் செய்து வருகிறேன்.

எனது சொந்த பணம்

எனது சொந்த பணம்

எம்.பி நிதிகள் ஒன்றும் நான் நடத்தும் அறக்கட்டளைகளை நடத்தவில்லை, அதனை நம்பி ஒன்றும் நான் பொதுசேவைகளை செய்யவில்லை. இதற்காக தான் ஐபிஎல் தொடரில் பணியாற்றி வருகிறேன். இதனை யாரும் குறை கூற வேண்டாம் எனக்கூறியுள்ளார்.

ஒரு ரூபாய்க்கு உணவு

ஒரு ரூபாய்க்கு உணவு

கவுதம் கம்பீர் "ஜான் ராசோய்" என்ற பெயரில் உணவகத்தை நடத்துகிறார். அதில் ரூ. 1 க்கு உணவு தருகிறார். இதே போல பல கல்வி சேவைகளையும் நடத்தி வருகிறார். இவையெல்லாம் தான் டெல்லி நகரத்தில் கம்பீரின் மரியாதையை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, June 4, 2022, 20:45 [IST]
Other articles published on Jun 4, 2022
English summary
Gautam gambhir on criticism ( விமர்சனங்களுக்கு கம்பீர் பதிலடி ) ஐபிஎல் தொடரில் பணியாற்றியதற்காக எழுந்த விமர்சனங்கள் குறித்து கவுதம் கம்பீர் தரமான பதிலடி கொடுத்துள்ளார்.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X